2024 நாடாளுமன்ற தேர்தலில்  I.N.D.I.A கூட்டணி வெற்றி பெறாவிட்டால் இந்தியாவை காப்பாற்ற முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.


ராமநாதபுரத்தில் தி.மு.க., தென் மாவட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பட்டறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 


அப்போது, ”பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த இராமநாதசுவாமி தேரை ஓடவைத்தது தி.மு.க.தான். வறட்சி மாவட்டமான இராமநாதபுரத்தை வளர்ச்சிப் பாதையின் கொண்டு சென்றது திமுக. இந்த மாவட்டத்திற்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆட்சி செய்ய வேண்டும் என்ற கலைஞர் கருணாநிதியின் கனவை நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் உங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது உங்கள் முதல் பணி. போலி வாக்களர்களை கண்டறிவது, முறையான வாக்களர்களை சந்தித்து அவர்களை ஈர்க்க வேண்டும். நாற்பது நமதே; நாடும் நமதே! என்று சொலவது உங்கள் மீதுள்ள நம்பிக்கையில் மட்டுமே.அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து வைத்துகொள்ளுங்கள்.” என்று உறுப்பினர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கினார். மேலும் மக்களின் நலனுக்கான ஆட்சியை நோக்கமாக கொண்டு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருதாக தெரிவித்தார்.


”ராமநாதபுரத்தில் கிராம சாலைகள், நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டது. தண்ணியில்லா காடாக இருந்த ராமநாதபுரத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தோம். இந்த மாவட்டத்திற்கு காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தை கொண்டுவந்தது திமுக அரசு. 5,000 சுனாமி மறுவாழ்வு குடியிருப்புகளை கட்டிக் கொடுத்தது திமுக அரசு.”என்று திமுக ஆட்சி காலத்தில் இந்த மாவட்டங்களுக்கு செய்யப்பட்ட நலத்திட்டங்கள் பற்றி பட்டியலிட்டார்.


இந்தியாவின் கட்டமைப்பை பா.ஜ.க. சீரழித்துவிட்டது


இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் ஆட்சி பற்றி பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் இருந்து ஜி.எஸ்.டி, வரி வசூல் செய்யும் மத்திய அரசு, நம் மாநிலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவதில்லை. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சிலப்பதிகாரம் படிப்பதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நிறைய நேரம் கிடைக்கும். எம்.ஜி.ஆர். வாழ்ந்த மண்ணில் பிரிவினைவாதமா என்று கேட்கிறார் பிரதமர் மோடி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதாக அறிவித்து செங்கல் மட்டுமே நிற்கிறது என குறிப்பிட்டு பேசினார்.


”வட மாநில மக்களின் ஆதரவையும் இழக்க தொடங்கிவிட்டது பாஜக அரசு. பாஜக விமர்சிப்பதில் இருந்து திமுக சரியான பாதையில் பயணிப்பதை தெரிந்து கொள்ளலாம். எம்ஜிஆர் வாழ்ந்த மண்ணில் பிரிவினைவாதமா என பிரதமர் மோடி கேட்கிறார்.  ”அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிட உடமையடா” என பாடியவர் எம்ஜிஆர் தமிழ்நாட்டிற்கான உரிமைகளை கேட்டால் பிரிவினை பேசுவதாக சொல்கிறார்கள்.  அமைச்சர் எ.வ வேலு நாட்டை பிரிப்பதாக வெட்டி ஒட்டி வாட்ஸப்பில் பரப்புகின்றனர். 2024 தேர்தலுக்கான நாடகம்தான் தற்போதைய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான நடவடிக்கைகள். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்து செங்கல் மட்டுமே உள்ளது ஒன்பது ஆண்டுகளாக முன்னேற்றம் இல்லை. இந்தியாவின் கட்டமைப்பையே பாஜக அரசு சீரழித்து விட்டது. I.N.D.I.A கூட்டணி வெற்றி பெறாவிட்டால் இந்தியாவை காப்பாற்ற முடியாது. திமுகவின் கொள்கையை மற்ற மாநில கட்சிகளும் பின்பற்ற தொடங்கி உள்ளது பாஜகவை உறுத்துகிறது. இந்தியாவில் இருக்கும் ஆன்டி இந்தியன்களாக பாஜகவினர் உள்ளனர். தேர்தலின்போது சொன்னபடி, 15 லட்ச ரூபாய் யாருடைய வங்கி கணக்கிலும் போடவில்லை. இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுக்கிறோம் என்ற வாக்குறுதியையும் நிறைவேற்ற வில்லை. 2014க்கு பிறகு தமிழக மீனவர்களின் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டதற்கு யார் பொறுப்பு? என்று பா.ஜ.க.வை சாடியுள்ளார்.