இந்திய திருநாட்டில் 77 வது சுதந்திர தின விழா  நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுகந்திர தினத்தை முன்னிட்டு   மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டமும் நேற்றைய தினம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் செம்பதனியிருப்பு ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கிராமசபை கூட்டம் நடைபெற்றது.




இதேபோன்று  மயிலாடுதுறை ஒன்றியம் சோழம்பேட்டை, கங்கன புத்தூர், பொன்னூர், பாண்டூர், திருமங்கலம், திருவேள்விக்குடி, உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீர் தேக்க தொட்டி அமைத்தல், தார் சாலை அமைத்தல், குடிநீர் வசதி, மின் இணைப்பு அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு வரவு செலவு கணக்குகள் பார்க்கப்பட்டது.


CM MK Stalin Speech: 10,000 சுய உதவிக்குழுவினருக்கு பயிற்சி.. ரூ 15,000 சுழல் நிதி ஒதுக்கீடு.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி..




இந்நிலையில் இதில் குறிப்பிடத்தக்க வகையில் சோழம்பேட்டை ஊராட்சியில் வரவு செலவு கணக்குகள் பற்றி பட்டியலிட்டு கிராம மக்கள் கேள்வி கேட்காத வண்ணம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்ச்செல்வி ராமமூர்த்தி வரவு செலவு கணக்குகள் விபரம் அச்சிடப்பட்ட பேனர் வைத்ததுள்ளார். ஊராட்சி கணக்கு ஒளிவு மறைவு இன்றி வெளிப்படையாக பேனர் வைத்த ஊராட்சி மன்ற தலைவரின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.  


Aadi Amavasya : ஆடி அமாவாசை.. வராக நதியில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி செய்து வழிபாடு..




மேலும், அனைத்து ஊராட்சிகளும் இது போன்று பேனர் வைத்து வரவு செலவு கணக்குகள் அதில் எழுதப்பட்டால் அனைத்து மக்களுக்கும் எந்தெந்த திட்டங்களில் எவ்வளவு வரவு செலவு செய்யப்பட்டுள்ளது  என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம் எனவும், இதனை அரசே ஒரு ஆணையாக பிறப்பிக்கலாம் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ஊராட்சி மன்ற வரவு செலவு கணக்குகளை மறைத்து எவ்வாறு பொதுமக்களை ஏமாற்றலாம் என எண்ணும் ஒரு சில ஊராட்சி மன்ற தலைவர்களில் இவரை போன்றவர்கள் விதிவிலக்காக திகழ்கின்றனர் என்றால் அது மிகையாகாது.