காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டு, தற்போது ஜூலை 6ம் தேதி  நடைபெறும் என காவிரி மேலாண்மை ஆணைய  தலைவர் ஹல்தர் அறிவித்துள்ளார். அதன்படி அடுத்த மாதம் ஜூலை 6ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த கூட்டத்தில் மேகதாது பகுதியில் கர்நாடக அரசு கட்ட முயற்சி செய்யும் மேகதாது அணை பற்றி விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்கக்கூடாது என்று தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதோடு இந்த கோரிக்கையை வலியுறுத்தி அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சி குழுவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி அனுப்பி உள்ளார். இருந்தபோதிலும் கர்நாடக அரசு தனது முடிவில் தீவிரமாக உள்ளது.




இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் முதலில் ஜூன் 17 ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அது 23 ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது 2 வது முறையாக மீண்டும் இந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து டெல்லியில் வருகின்ற ஜுலை 6 ஆம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது. 


Coimbatore : கோவை ஆட்சியர் பெயரில் போலி Whatsapp கணக்கு.. மோசடி நபர்கள் குறித்து தீவிர விசாரணை..




இந்தக் கூட்டத்தில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்ட வரைவு பற்றி விவாதிக்கப்பட உள்ளதாக அம்மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோள் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


Dr Aarti Prabhakar : அமெரிக்காவின் முதன்மை அறிவியல் ஆலோசகராகும் இந்திய வம்சாவளி பெண்.. யார் இந்த ஆர்த்தி பிரபாகர்?




மாவட்ட தலைவர் சிம்சன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு  காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும், கர்நாடக அரசின் திட்ட வரைவு பற்றி விவாதிக்க முடிவு செய்து உள்ள காவிரி மேலாண்மை அணைய முடிவை கண்டித்து 70 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண