கோவை மாவட்ட ஆட்சியராக ஜி.எஸ்.சமீரன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சமீரன் பெயர் மற்றும் புகைப்படத்தை ஒரு வாட்ஸ் அப் கணக்கை அடையாளம் தெரியாத நபர்களால் துவங்கப்பட்டுள்ளது. அந்த வாட்ஸ் அப் மூலம் மோசடியில் ஈடுபட முயன்றதாக, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து கோவை சைபர் கிரைம் காவல் துறையினரிடம் ஆட்சியர் சமீரன் புகார் அளித்துள்ளார். அதில் தனது பெயர் மற்றும் புகைப்படம் கொண்ட (8788019763) வாட்ஸ்அப் எண்ணில் இருந்து அமேசான் கிஃப்ட் பே கூப்பன் மூலம் பணம் கேட்டு மோசடியில் ஈடுபட முயன்றதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



இதனிடையே தனது பெயரில் நடந்த மோசடி முயற்சி குறித்து டிவிட்டரில் ஆட்சியர் சமீரன் பதிவிட்டுள்ளார். அதில் ‘கோவை மாவட்டத்தில் உள்ள உயர் அலுவலர்களின் புகைப்படங்களுடன் கூடிய எண் எனக் கூறிக்கொண்டு சில மர்ம நபர்கள், அரசு அதிகாரிகளின் அலைபேசி எண்ணுக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற மோசடி பேர்வழிகள் மீது காப்வல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.



அண்மையில் இதே போல புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் உள்ளிட்டோரின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி போலி வாட்ஸ்அப் எண் மூலம் அரசு ஊழியர்களிடம் பணம் கேட்டு மோசடியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண