மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட மக்கள் மூலம் திரட்டப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்புடைய நிவாரண பொருட்களை  மூன்று லாரிகளில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சென்னைக்கு அனுப்பி வைத்தார். தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று கால தாமதமாக துவங்கிய போதிலும் தற்போது வரை போதிய மழையானது பெய்துள்ளது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் ஒர் புயல் சின்னம் உருவாகி அது ஏதேனும் ஒரு பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றுவிடும். அந்த வகையில் இந்த பருவ மழையில் உருவாகிய மிக்ஜாம் புயலானது தமிழகத்தில் தலைநகரான சென்னையை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி சென்றுள்ளது.


Chennai MTC Bus Service: சென்னையில் 603 வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு




மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்களை அதீத கனமழையும் மூலம் புரட்டி போட்டுள்ளது. இதனால் சென்னை முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு, அங்குள்ள மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி குடிநீர், பால் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு கூட கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதையடுத்து  தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு உதவிகரம் நீட்டும் வண்ணம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில்  38-வது மாவட்டமான கடைசியாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து நிவாரண பொருட்கள் மூன்று லாரிகளில் சென்னைக்கு ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.


Crude Oil Leak: மிக்ஜாம் புயல் தாக்கம்: கசியும் கச்சா எண்ணெய்: எண்ணூரில் அவலம்: களத்தில் இறங்கிய விஜய் மக்கள் இயக்கம்!




அனைத்து அரசு துறை, வணிகர்கள் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட குடிநீர், பிஸ்கட், அரிசி, பருப்பு, எண்ணெய், நாப்கின், பாய், போர்வை உள்ளிட்ட 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவை கணக்கீடு செய்யப்பட்டு மூன்று லாரிகள் மூலம் சென்னை மாநகராட்சி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிவாரண பொருட்கள் அடங்கிய கனரக லாரிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


ஒரு வாரத்திற்கு பிறகு கடலுக்குச் சென்ற 22 தமிழக மீனவர்கள்: கைது செய்த இலங்கை கடற்படை!