மயிலாடுதுறையில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்மணி ஒருவர் திடீரென இறங்கி வந்து ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி கண்ணீர் மல்க மரியாதை செலுத்தி நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தமிழக மக்களால் அம்மா என அழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  கடந்த 2016 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 -ம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சைக்குப்பின் உடல் நலம் தேறிவந்ததாகக் கூறப்பட்ட நிலையில் திடீர் மாரடைப்பால் 2016 டிசம்பர் மாதம் 5 -ம் தேதி நள்ளிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார்.




பல்வேறு மக்கள் நல திட்டங்களால் தமிழக மக்களுக்கு மிகவும் நெருக்கம் ஆனார். பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதி உதவி திட்டம், மாணவர்களுக்கு இலவச சைக்கிள், அம்மா உணவகம் என தமிழகம் தலை நிமிர ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார். இதனால் அதிமுகவினர் மட்டும் இன்றி அனைத்து தரப்பினராலும் அம்மா என்று அழைக்கப்பட்டவர் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் அதிமுக, அமமுக, உள்ளிட்ட கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது.


Half Yearly Exam Postponed: மழை பாதிப்பால் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு?- கல்வித்துறை ஆலோசனை




இதையொட்டி எதிர்க்கட்சித் தலைவரான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடையாறில் உள்ள தனது வீட்டில் உள்ள ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கும் சென்று மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில்  பல்வேறு இடங்களில் அதிமுக, அமமுகவினர் ஜெயலலிதாவின் படங்களை வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பாரதி ஏற்பாட்டில் ஜெயலலிதா அவர்களின் திரு உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மலர் தூவி மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து அதிமுகவினர் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள் சக்தி, சந்திரமோகன், உள்ளிட்ட அதிமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.




இதுபோன்று மயிலாடுதுறை சின்ன கடைவீதியில் அமமுக நகர செயலாளர் ராதா ஏற்பாட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் தலைமையில் ஏராளமான பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிலையில் அமமுகவினர் மரியாதை செலுத்தி சென்ற சூழலில் அவ்வழியாக சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்மணி ஒருவர் வாகனத்தை நிறுத்தி விட்டு காலணியை கழட்டி விட்டு ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அவர் படத்தை தொட்டு தழுவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி சென்றார். இந்நிகழ்வு பார்த்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 


Ola S1 X+ Price Cut: S1 X+ மாடலின் விலையில் ரூ.20 ஆயிரத்தை குறைத்த ஓலா நிறுவனம்! புதிய நிலவரம் என்ன?