மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுக்கா பகுதிகளில் பம்புசெட் நீரை கொண்டு முன்பட்ட குறுவை சாகுபடி செய்வது வழக்கம். அதன்படி மாவட்ட முழுவதும் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டு தற்போது பல இடங்களில் அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் லேசான மழை பெய்த நிலையில், நேற்று நள்ளிரவு பலத்த மழை மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நள்ளிரவு முதல் இன்று காலை 6 மணி வரை  மயிலாடுதுறையில் 65.6 மில்லிமீட்டர், மணல்மேட்டில் 37 மில்லிமீட்டர், சீர்காழியில்  39.2 மில்லிமீட்டர், கொள்ளிடம் 49 மில்லிமீட்டர், செம்பனார்கோயில் 26.8 மில்லிமீட்டர், தரங்கம்பாடி 12 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதிகப்படியாக மயிலாடுதுறையில் 65.6 மில்லிமீட்டர் மழையும், குறைந்தபட்சமாக தரங்கம்பாடியில் 12 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.


Ecuador: ஈகுவடார் அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ விலாவிசென்சியோ சுட்டுக்கொலை.. அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..




இந்த மழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மங்கைநல்லூர், மணல்மேடு, திருஇந்தளூர், நல்லத்துக்குடி, மணக்குடி, சேமங்கலம், சீர்காழி, செம்பனார்கோயில்  உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து மழை நீரில் மிதக்கிறது.  பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் நீரில் சாய்ந்து கிடப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ள சூழலில் அறுவடை நேரத்தில் மழை பெய்தது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்துள்ளது. மேலும் இந்த மழை மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் பயிர்கள் நீரில் மூழ்கி அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் வேதனை  தெரிவிக்கின்றனர். தற்போது தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்து வருவதால் விவசாயிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


Jailer Review: ‘தியேட்டரில் தலைவரு அலப்பறை’ .. ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி? .. முதல் விமர்சனம் இதோ..!




மேலும் இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் கூறுகையில், பல்வேறு கடன் பட்டு, பல இன்னல்களுக்கு மத்தியில் இந்த விவசாயத்தை செய்து வருகிறோம். ஆனால் பெருமளவு சம்பா சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யும் காலத்தில் பெரும்பாலும் மழை வெள்ள பாதிப்புகளில் சிக்கி தாங்கள் செய்த பயிர்கள் மழை நீரில் மூழ்கி பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவது தொடர்கதையாக உள்ள சூழலில், தற்போது காவேரி நீரை எதிர்பாராமல் நிலத்தடி நீரைக் கொண்டு முன்பட்ட குருவை சாகுபடி செய்து ஏதோ சிறு அளவில் தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றி கொள்ளலாம் என்று எண்ணிய நிலையில், தற்போது பெய்யும் மழையால் அதுவும் தங்களுக்கு பேரு இடியாக விழுந்து உள்ளது. இதனை அரசு கவனத்தில் கொண்டு உரிய கணக்கீடு செய்து தங்களுக்கு இழப்பீடு வழங்கி விவசாயத்தையும் விவசாயிகளையும் காக்கா நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.


காஞ்சிபுரம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2வது நாளாக இடி, காற்றுடன் கனமழை