தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தொடங்கி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழக மக்களுக்கு பல்வேறு எண்ணற்ற திட்டங்களை புதிதாக அறிமுகப்படுத்தியும், ஏற்கனவே நடைமுறையில் இருந்த பல்வேறு அரசு திட்டங்களில் திருத்தங்கள் மேற்கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் "ஓயா உழைப்பின் ஓராண்டு" எனும் தலைப்பின் கீழ் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மாவட்டம் தோறும் அரசு நல திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி மற்றும் மக்கள் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டது. அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் கோயில் நந்தவனத்தில் கடந்த 15 -ம் தேதி காலை புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டது.
புகைப்பட கண்காட்சியினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார். இந்நிகழ்வில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். புகைப்பட கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு திட்டங்கள் துவக்கி வைத்தல் குறித்த புகைப்படங்களும், அரசு திட்டங்கள் குறித்த விளம்பரங்களும் மேலும் அது குறித்த பொதுமக்கள் அறிந்து கொள்ள வகையில் துறை சார்ந்த அலுவலர்களின் அரங்குகளில் துண்டு பிரசுரங்கள் வழங்குதல் உள்ளிட்டவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து 24 ஆம் தேதி இரவு 9 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது. தொடர்ந்து ஏழாம் நாள் கண்காட்சியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இயக்குனர் அமுதவல்லி ஐஏஎஸ் கலந்துகொண்டு பார்வையிட்டார். பின்னர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மஞ்சள் பை , மரக்கன்றுகளை வழங்கினார்.
Gold, Silver Price: ஹேப்பி நியூஸ் மக்களே...தங்கம் விலையில் மாற்றமில்லை...இன்றைய நிலவரம் இதுதான்..
அப்போது அவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், “ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படத்தில் எட்டு எட்டாய் மனித வாழ்வை பிரித்துக்கொள் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப குழந்தைகள் முதல் எட்டு வயது வரை விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து சந்தோசமாக விளையாட வேண்டும், அதற்கு அடுத்ததாக எட்டு வயதிலிருந்து 16 வயது வரை முழு நேரம் கல்வி பயின்று பெற்றோர்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். மாணவர்கள் தாங்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ், மருத்துவர், வக்கீல் ஆக வேண்டும் என்ற கனவை நிர்ணயித்து அதனை அடைய மாணவர்கள் சிறப்பாக படிக்க வேண்டும்” என்றார்.
மேலும், பிளாஸ்டிக்கை தவிர்க்க மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும், ஒவ்வொரு மாணவர்களும் ஒவ்வொரு மரம் நட்டு வைத்து அதை வளர்க்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்று மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, கோட்டாட்சியர் யுரேகா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.