மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 11 -ஆம் தேதி பெய்த வரலாறு காணாத கனமழையின் காரணமாக சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்நிலையில்  மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பல்லவராயன்பேட்டை, ஆனந்தகுடி, அருண்மொழித்தேவன் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு பார்வையிட்டார். 




அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தை மழையால் பாதித்த மாவட்டமாக அறிவித்து அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும், அமைச்சர்கள் உள்ள மாவட்டங்களில் 50 கோடி, 60 கோடி என காப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் அமைச்சர் இல்லாத மாவட்டமாக உள்ளதால் குறைந்த நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட விவசாயிகளை அழைத்துப் பேச வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துவோம். அதற்கும் உடன்படவில்லை என்றால் சென்னையை முற்றுகையிடுவோம்


Bihar accident: வேகமாக வந்த லாரி.. மத ஊர்வலத்தில் பயங்கர விபத்து.. குழந்தைகள், பெண்கள் என 12 பேர் உயிரிழப்பு..!


 



முறையாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஏக்கருக்கு ரூபாய் 30,000 நிவாரணமாக வழங்க வேண்டும், தேர்தல் வந்தால் நாட்டின் முதுகெலும்பாக நினைக்கும் அரசுகள்,  தேர்தலுக்குப்பின் விவசாயிகளை அடிமைகளாக கருதுவது வேதனை அளிக்கிறது என்றார்.  இந்நிகழ்வில் போது, சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் உள்ளிட்ட பல விவசாயிகள் உடனிருந்தனர்.




மயிலாடுதுறையில் நடைபெற்ற மெகா கண் பரிசோதனை முகாமில் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டார். பூம்புகார் எம்எல்ஏ உள்ளிட்ட திமுக, பாஜக, பாமக பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். மெட்ராஸ்-ஐ வேகமாக பரவி வருவதால் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று சென்றனர்.


மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மெகா கண் பரிசோதனை முகாமில் 480 பயனாளிகள் கலந்து கொண்டு தங்கள் கண்களை பரிசோதனை செய்து கொண்டனர். வேகமாக பரவி வரும் மெட்ராஸ்-ஐ காரணமாக கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் சிவத்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர், முன்னெச்சரிக்கையாக இந்த இலவச முகாமில் கலந்து கொண்டு தங்கள் கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.




இந்த முகாமில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் கலந்து கொண்டு இலவச கண் பரிசோதனை செய்து கொண்டார். இதில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் உள்ளிட்ட திமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் தீவிர கண் பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டு இலவச மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.


Mari Selvaraj: மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு.. ஷூட்டிங்கை தொடங்கி வைத்த உதயநிதி.. டைட்டில் இதுதான்!