மாயூரநாதர் கோயில் யானை பராமரிப்பு குறித்து வனத்துறையினர் ஆய்வு

யானைக்கு வழங்கப்படும் உணவுகள், யானை தினசரி முறையாக நடைபயிற்சி கூட்டிச் செல்லப்படுகிறதா?.

Continues below advertisement

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் உள்ள அபயாம்பிகை யானையின் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து வனத்துறையினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். 

Continues below advertisement

மயிலாடுதுறையில் மாயூரநாதர் கோயிலில் உள்ள அபயாம்பிகை என்ற பெண் யானையை மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர் தலைமையிலான குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.  மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாடல் பெற்ற மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது.  இந்த ஆலயத்திற்கு 1972 -ஆம் ஆண்டு மூன்று வயது குட்டியாக அபயாம்பிகை யானை அழைத்துவரப்பட்டது. மூன்று தலைமுறைகளாக யானை பாகன்கள் குடும்பத்தினர் இந்த அபயாம்பிகை யானையை பராமரித்து வருகின்றனர்.

‘ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயம் – 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம்’ மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கோப முகம் காட்டிய எடப்பாடி..!


விழாக்காலங்களில் உற்சவ மூர்த்தி புறப்பாட்டின்போது சுவாமிக்கு முன்னர் யானை அபயாம்பாள் சென்றால் தான் விழா களைகட்டும். உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களின் 50 ஆண்டுகளுக்கு  மேலாக செல்லப் பிள்ளையாக அபயாம்பிகை யானை வலம் வருகிறது. காலில் கொலுசு, குளிப்பதற்கு மிகப்பெரிய ஷவர், யானை கொட்டகையில் காற்று வருவதற்காக ராட்சத மின்விசிறி, என  இந்த யானைக்கு பல்வேறு வசதிகளை பக்தர்கள் ஏற்படுத்தி  தந்துள்ளனர். இந்நிலையில் வளர்ப்பு யானைகள் பராமரிப்புச் சட்ட விதிகளின்படி, கோயில் யானைகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா? என்பது குறித்து  மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர் தலைமையிலான குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.

NLC Recruitment 2023: ரூ.1.60 லட்சம் வரை சம்பளத்தில் என்.எல்.சியில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


அப்போது கோயில் யானை அபயாம்பிகை பராமரிக்கப்படும் இடம், யானைக்கு வழங்கப்படும் உணவுகள், யானை தினசரி முறையாக நடைபயிற்சி கூட்டிச் செல்லப்படுகிறதா? முறையாக பராமரிக்கப்படுகிறதா? தேவையான அளவு உணவு வழங்கப்படுகிறதா? யானையிடம் ஏதேனும் மாற்றங்கள் தென்படுகிறதா? மாதாந்திர மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதா, உரிய நடைபயிற்சி அளிக்கப்படுகிறதா? என்பன உள்ளிட்ட தகவல் குறித்து ஆய்வு ஆய்வு செய்தனர். மேலும், கோயில் துணை கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் யானை பாகன் செந்தில் ஆகியோரிடம் அவர்கள் யானை குறித்து கேட்டறிந்தனர்.

National Education Policy: தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக 16 மாணவர் அமைப்புகள் கூட்டாக போராட்டம்; நாடாளுமன்ற பேரணி அறிவிப்பு


மேலும் யானை தற்போது பராமரிக்கப்பட்டு வரும் யானை கொட்டகை இல்லாமல், தனியாக வேறொரு இடத்தில் விஸ்தாரமாக காற்று வசதியுடன் கூடிய ஷெட் அமைக்க கோயில் நிர்வாகத்தினரிடம் ஆய்வுக் குழுவினர் அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது, சீர்காழி வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல், வனவர் கதாநாயகன், வனவிலங்கு ஆர்வலர் சிவகணேசன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Bank Holidays December 2023: டிசம்பர் மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கி விடுமுறையா? முன்கூட்டியே வேலையை முடிங்க!

Continues below advertisement