தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கி சுமார் 15 நாட்களுக்கு மேலாக தொடர் மலையாகவும், நான்கு தினங்கள் கன மலையாகவும் பதிவாகியது. இந்த தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது.
மேலும் தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு, அது திருச்சி முக்கொம்பு அணைக்கு பெருக்கெடுத்தது, அதனைத் தொடர்ந்து திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து காவிரி தண்ணீரை டெல்டா மாவட்டம் பாசன வசதி பெறும் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் அணைக்கரை சத்திரம் அருகே செல்லும் கொள்ளிடம் ஆற்றின் நடுவில் அமைந்துள்ள மணல்திட்டு, சந்தப் படுகை, வல்லம்படுகை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் கறவை பசுமாடுகள் வழக்கமாக மேய்ச்சலுக்காக செல்வது வழக்கம். அவ்வாறு சென்ற மாடுகள், இந்நிலையில் திருச்சி முக்கொம்பில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் திடீரென அதிகரித்தால் மேய்ச்சலுக்கு சென்ற இருபத்தி ஏழு பசுமாடுகள் கன்று குட்டிகள் உடன் ஆற்றின் நடு திட்டில் மாட்டிக்கொண்டு திரும்ப முடியாமல் தவித்தன.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ஏபிபி நாடு செய்தி நிறுவனம் செய்தியாளர் மாடுகள் ஆற்றின் நடுவே மாட்டிக் கொண்டது குறித்து நேரலையில் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் நேரலை பகிரப்பட்டு மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு சென்றது. இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக மாடுகளை மீட்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதனை அடுத்து கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு விரைந்த வருவாய்த்துறையினர் மற்றும் சீர்காழி தீயணைப்பு துறையினர், சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாடுகளின் உரிமையாளர்களும் இணைந்து பைபர் படகுகள் மூலம் கொள்ளிடம் ஆற்றின் நடுவில் மாட்டிக்கொண்ட இருபத்தி ஏழு பசு மாடுகளை பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
பேரிடர் நிவாரண நிதி எங்கே? அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கேள்வி!
இதுகுறித்து மாட்டின் உரிமையாளர்கள் கூறுகையில், தங்களின் வாழ்வாதாரமான மாடுகள் ஆற்றின் நடுவில் மாட்டிக்கொண்டு வெள்ளத்தில் அடித்து சென்று விடுமோ என்ற அச்சத்தில் இருந்த தங்களுக்கு இது குறித்து செய்தி வெளியிட்டு தங்கள் மாடுகளை பத்திரமாக மீட்க உதவிய ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தனர்.