வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நேற்று கரையை கடந்தது. இதன் தாக்கத்தால் சென்னையில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வந்தது. தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக சென்னை முழுவதும் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது.


இந்த கனமழை காரணமாக சென்னை முழுவதும் ஆங்காங்கே மழைநீர் தேங்கி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். கடந்த 2015 ம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு, தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் வடிகால் பாதைகள் மற்றும் தேங்கிய நீர்களை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 



இருப்பினும், 2015 ம் ஆண்டு வெள்ளத்திற்கு பிறகு ஏற்பட்ட வர்தா புயல், நிவர் புயல் தாக்கத்தால் தொடர்ந்து சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள நீர்கள் தொடர்ந்து சூழ்ந்து வருகிறது. தொடர்ந்து நான்கு நாட்களாக மழை பெய்து வந்ததால் சாலைகளில் தேங்கிய மழைநீரை அகற்ற தூய்மை பணியாளர்கள் மிகுந்த சிரமத்துடன் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தநிலையில், சென்னையில் இனி அடுத்து வரும் வருடங்களில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் 14 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டது.


இந்தநிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டபொழுது, தமிழ்நாடு அரசு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதியை ஏன் இன்னும் அறிவிக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். 


இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வங்கக்கடலில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், தலைநகர் சென்னையை தொடர்ந்து 13 டெல்டா மாவட்டங்களும் இந்த மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மக்களுக்கு நிவாரணநிதி வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து எந்தவொரு நிதியையும் வழங்கவில்லை, அதற்கான அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளார். 


 


மேலும் செய்திகளை காணABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண