தமிழ்நாடின் கடைசியாக பிரிக்கப்பட்ட 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த 2021 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. மாவட்டத்தின்  முதல் ஆட்சியராக இரா.லலிதா மற்றும் காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒவ்வொரு துறையாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரித்து முழுமையாக இங்கு செயல்பட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் வணிக வரி வளாக கட்டிடத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வேறு கட்டிடத்திலும்  இயங்கி வருகிறது.




மயிலாடுதுறை புதிய மாவட்டம் அறிவிப்பதற்கு முன்பாகவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான இடத்தினை தருமபுரம் ஆதீனம் வழங்குவதாக உறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் பால்பண்ணை என்ற பகுதியில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 23 ஹெக்டேர் இடத்தில் ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்காக பொதுப்பணித்துறை கட்டட அமைப்பு, கட்டட வட்டம் திருச்சி சார்பில் 114 கோடி திட்ட மதிப்பீட்டில் 7 மாடி கட்டிடமாக உருவாகி வருகிறது. 


Volvo C40 Recharge: அடேங்கப்பா..! வால்வோ சி40 ரீசார்ஜ் மாடல் காரின் விலை உயர்வு.. இதெல்லாம் ஒரு காரணமா?




அதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்து சாலை அமைப்பது உள்புற வடிவமைப்புகள், வர்ணம் பூசுவது பூசுவது உள்ளிட்ட இறுதி கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றது. மேலும் வளாகத்திற்கு உள்ளேயே பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை தனியாக கட்டப்பட்டு வருகிறது. மழைநீர்  சேகரிப்புக்காக பிரம்மாண்டமான வடிகால் வாய்க்கால்கள் கட்டப்பட்டு அவை அருகில் உள்ள குளங்களுக்கு சென்று சேரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தை சுற்றி உள்ள சாலைகள் அமைக்கும் பணி, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இந்தப் பணிகள் இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவடையும் என்று தெரிய வருகிறது.


Actress Abarnathy: சினிமாவில் என்ன 'கிழிக்க' போகிறாய்? .. நடிகை அபர்ணதியை கேள்வி கேட்டவருக்கு ஏற்பட்ட நிலைமை..!




அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் விரைவில் திறப்பு விழா காண உள்ளதாக வருவாய் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்நிலையில் கட்டுமான பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலகுமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ABP Southern Rising Summit 2023 - சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் நம்பர் 1