Volvo C40 Recharge: அடேங்கப்பா..! வால்வோ சி40 ரீசார்ஜ் மாடல் காரின் விலை உயர்வு.. இதெல்லாம் ஒரு காரணமா?

Volvo C40 Recharge: வால்வோ சி40 ரீசார்ஜ் மாடல் காரின் விலையை ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை உயர்த்தி அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Continues below advertisement

Volvo C40 Recharge: தேவை அதிகரித்து இருப்பதன் காரணமாக, சி40 ரீசார்ஜ் மாடல் காரின் விலையை வால்வோ நிறுவனம் உயர்த்தியுள்ளது.

Continues below advertisement

வால்வோ சி40 ரீசார்ஜ் மாடல்:

சி40 ரீசார்ஜ் மாடல் காரின் அறிமுக காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, அந்த காரின் விலையை வால்வோ நிறுவனம் உயர்த்தியுள்ளது. அதன்படி, அந்த காரின் விலை தற்போது 62 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 5ம் தேதி இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதன் விலை 61 லட்சத்து 25 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது விலையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அறிமுகமானதில் இருந்து 100 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தேவை அதிகரித்து இருப்பதால் விலையை உயர்த்துவதாக வால்வோ நிறுவனம் தெரிவித்துளது. வால்வோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு லட்ச ரூபாயை முன்பணமாக செலுத்தி, விருப்பமுள்ளவர்கள் தங்களுக்கான C40 ரீசார்ஜ் மாடல் காரை முன்பதிவு செய்துகொள்ளலாம். 

பேட்டரி விவரம்:

இரட்டை மோட்டார் செட்டப் கொண்டிருக்கும் வால்வோ C40 ரிசார்ஜ் மாடலில், 78 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் இடம்பெற்று உள்ளது. இதில் உள்ள இரட்டை மோட்டார்கள் ஒவ்வொரு ஆக்சில்களிலும் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த இரு மோட்டார்கள் இணைந்து 402 ஹெச்.பி. பவர் மற்றும்  660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 530 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் எனும் வேகத்தை வெறும் 4.7 நொடிகளில் எட்டிவிடும்.  இது XC40 ரீசார்ஜை விட 0.2 வினாடிகள் வேகமானது. C40 ரீசார்ஜ் ஆனது 150kW DC சார்ஜர் மூலம் வேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டது, அதன் பேட்டரிகளை 27 நிமிடங்களில் 0 முதல் 100 சதவீதம் வரை டாப் அப் செய்ய முடியும்.

யாருக்கு போட்டி:

C40 ரீசார்ஜ் கார் மாடலானது இந்திய சந்தையில்  Kia EV6  (ரூ. 60.95-ரூ. 65.95 லட்சம்) மற்றும்  ஹூண்டாய் ஐயோனிக் 5  (ரூ. 48.47 லட்சம்) ஆகிய மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.  XC40 ரீசார்ஜ் (ரூ. 56.90 லட்சம்) மாடல் காரை போலவே, C40 காரும் உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படுகிறது. ஆனிக்ஸ் பிளாக், க்ரிஸ்டன் வைட், ஃபியுஷன் ரெட், கிளவுட் புளூ, ஜோர்ட் புளூ மற்றும் சேஜ் கிரீன் போன்ற ஆறுவிதமான வண்ணங்களில் வால்வோ C40 ரிசார்ஜ் மாடல் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

வடிவமைப்பு & சிறப்பம்சங்கள்:

C40 ரீசார்ஜ் என்பது அடிப்படையில் ஒரு SUV பிரிவில் உள்ள XC40 ரீசார்ஜ் மாடல் காரின் மறுவடிவமைப்பாகும்.  காரின் அம்சங்களை பொருத்தவரை, புதிய வால்வோ C40 ரிசார்ஜ் மாடலில் 9- இன்ச் அளவில் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் கூகுள் மேப்ஸ் மற்றும் அசிஸ்டண்ட்டிற்கான நேரடி அணுகல் மற்றும் பல செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து ஆன்போர்டு இ-சிம் உதவியுடன் பெறுகிறது. பனோரமிக் சன்ரூஃப், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஆட்டோமேடிக் டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் சார்ஜர்  போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.  360 டிகிரி கேமரா, தன்னாட்சி ஓட்டம் கொண்ட சென்சார் அடிப்படையிலான ADAS தொழில்நுட்பத்தின் முழு தொகுப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. 

Continues below advertisement
Sponsored Links by Taboola