மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தென்பாதி சர்வ மானிய தெருவை சேர்ந்தவர் 45 வயதான சீனிவாசன். இவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள கிணற்றில் 3 மரநாய் குட்டிகள் கிடந்ததை அவரது மகன் பார்த்து அதிர்ச்சியடைந்து தனது அப்பாவிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சீனிவாசன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்றில் தண்ணீரில் தத்தளித்த 3 மரநாய்கள் குட்டிகளையும் பத்திரமாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். அதில் ஒரு மரநாய் குட்டி அச்சத்தில் அங்கிருந்த மரத்தில் ஏறி நின்று கொண்டது. மீதமுள்ள 2 மரநாய் குட்டிகளை லாவகமாக பிடித்து கூண்டில் அடைத்து வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து சீர்காழி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சீனிவாசனின் வீட்டிக்கு விரைந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தில் ஏறி நின்ற ஒரு மரநாய் குட்டியையும் பிடித்தனர். பின்னர் 3 மரநாய் குட்டிகளையும் கூண்டில் அடைத்து பாதுகாப்பாக கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர்.
இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் சீனிவாசன் கூறுகையில், தனது வீட்டின் அருகில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி ஒரு வீடு பூட்டி கிடைப்பதாகவும், அந்த வீட்டை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடப்பதால் பாம்பு, மரநாய் உள்ளிட்டவை சுற்றித்திரிகின்றன. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் அவதிப்பட்டு வருவதாகவும். தென்னை மரங்களில் உள்ள தேங்காய்களை மரநாய்கள் சேதப்படுத்தி வருவதாகவும், பூட்டி கிடக்கும் வீடு மற்றும் கொல்லைபுறத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் நகராட்சி நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் விடுத்தார்.
மர நாய்கள் பொதுவாக விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் தென்னை மரங்களில் உள்ள தேங்காய், இளநீர் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்த கூடியவை. இதனால் இவைகளை விஷம் வைத்து கொள்ளும் முயற்சியிலும் பலர் ஈடுபடுவர். இவ்வாறான சூழலில் கிணற்றில் விழுந்த மரநாய் குட்டிகளை பாதுகாப்பாக உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்த சீனிவாசனை விலங்கு ஆர்வலர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
என்ஜாய் எஞ்சாமி... யாரால் உருவானது? அறிவு போட்ட பதிவுக்கு பதில் பதிவுபோட்ட சந்தோஷ் நாராயணன்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்