தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை கண்டித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஒன்றியத்தின் மாநில தலைவர் ஆர்.சண்முகராஜன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்கத்தின் மாநில நிர்வாகிகள் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.சண்முகராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைகள் மேற்கொண்டனர்.




கூட்டத்தில், தொடர்ந்து அரசு ஊழியர்களை அவமதிக்கும் நோக்கில் செயல்பட்டு வரும்  தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் கண்டனம் தெரிவித்தும், 3% அகவிலைப்படியை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும்,  ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதி தமிழ்நாட்டில் தஞ்சை, கடலூர்,  திருவண்ணாமலை, மதுரை, ஈரோடு ஆகிய ஐந்து மண்டலங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.




Amala Paul: ‛இவனை ஏண்டா லவ் பண்ணோம்னு பீல் பண்ணேன்...’ போட்டு உடைத்த அமலா பால்!


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.சண்முகராஜன், திமுக அரசு பதவியேற்றதும் ஏற்கனவே அறிவித்த பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக முதல்வர் கொண்டு வருவார் என எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து அரசு அலுவலர் சமுதாயத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வருகிறார். முதியோர் உதவித் தொகையை அரசு அலுவலர் ஊதியத்துடன் இணைத்து பேசியுள்ளார்.




இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிற ஆகஸ்ட் 8 ஆம் தேதி அனைத்து துறையில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபடுவார்கள் என்றும் கூறினார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண