வீட்டில் பூஜை நடந்துகொண்டிருக்கும்போது திடீரென மூர்க்கமாக நடந்துகொண்ட 15 வயது சிறுமி வீட்டில் இருந்த வாளை எடுத்து தன்னுடைய உறவினரின் மகளின் தலையை வெட்டி வீசினார். இந்த ஷாக்கான சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.


ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினர் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஹாஸ்டலில் தங்கி படித்துகொண்டிருக்கும் அச்சிறுமி சில தினங்களுக்கு முன்புதான் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்ததில் இருந்தே சிறுமியின் நடத்தையில் மாற்றம் இருந்துள்ளது. வழக்கமாக இல்லாமல் ஏதோ ஒருவித படபடப்புடனும், மூர்க்கத்தனத்துடனும் அவர் இருந்துள்ளார். இதற்கிடையே சிறுமியின் வீட்டில் அவரது உறவினர் பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். 


Crime : வாஷிங் மெஷினின் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சிறுவன்...என்ன நடந்தது? பகீர் தகவல்




வீட்டில் நடக்கும் பூஜைக்கு சிறுமியின் உறவினர்களும் வருகை தந்துள்ளனர். பூஜை நடந்துகொண்டிருக்கும்போது  திடீரென மூர்க்கமான அச்சிறுமி அருகில் இருந்த பெரிய வாளை  அடுத்து அனைவரையும் வெட்ட முயற்சித்துள்ளார். என்ன நடக்கிறது என்றே புரியாத சிறுமியின் பெற்றோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அனைவரும் சுதாரித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர். ஆனால் வாளை கையில் எடுத்துகொண்டு பக்கத்து அறைக்குச் சென்ற சிறுமி அங்கு விளையாடிக்கொண்டிருந்த 9வயது சொந்தக்கார சிறுமியின் தலையை வெட்டி வீசினார். இதனை சற்றும் எதிர்பாராத குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். 


இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள போலீசார், '' சிறுமியின் நடத்தையில் திடீர் மாற்றம் ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பூஜை நடைபெறுவதால் இரண்டு நாட்களாக அந்த சிறுமி சாப்பிடவே இல்லை. விடுதியில் தங்கி 10ம்வகுப்பு படிக்கும் சிறுமி சில தினங்களுக்கு முன்பே வீட்டுக்கு வந்துள்ளார். இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டுள்ளோம். சிறுமிக்கு சிகிச்சை தேவைப்படும் என நினைக்கிறோம் என்றார்.


15 வயதேயான சிறுமி சொந்தக்கார சிறுமியின் தலையை துண்டித்த செய்தி அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Madhya Pradesh: ஒரே ஊசியில் 39 குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி... துறை தலைவரின் உத்தரவால் நர்சிங் மாணவர் செய்த கொடூரம்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண