மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகை ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் வீடுகளில் நாள்தோறும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகளை வகை பிரித்து வழங்க பல்வேறு விழிப்புணர்வுகளை அரசு சார்பில் ஏற்படுத்தி வருகிறது. இருந்த போதிலும், மக்கள் என்னவோ குப்பைகளை அவ்வாறு வகை பிரிக்காமல் தூய்மைப் பணியாளரிடம் மொத்தமாக கொடுத்து விடுகின்றனர். 




Yearender2021: ராயல் என்பீல்டு பைக் திருடன் முதல் திமுக கோட்டையான மயிலாடுதுறை வரை இந்தாண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள்


இதனால் இதனை மொத்தமாக சேகரித்து சென்று தூய்மைப் பணியாளர்கள் குப்பை கிடங்கில் வைத்து பிரித்தெடுப்பது என்பது பெரும் சிக்கலான ஒன்றாகவும், பணியாட்கள் பற்றாக்குறை, நேர விரையம் போன்ற காரணங்களால் குப்பைகளை முழுமையாக தரம் பிரிக்க முடியாமல்  அவைகள் குப்பை கிடங்கில் பெரும் மலைபோல் குவித்து எரிக்கும் நிலை உள்ளது. இதனால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் ஆஸ்த்துமா, கண் எரிச்சல், மூச்சு விட சிரமம் உள்ளிட்ட பல்வேறு  உடல் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.



Meendum Manjapai : ‛மஞ்சப்பை என்பது அவமானம் அல்ல...’ -முதல்வர் ஸ்டாலின் பேச்சு!


இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை ஊராட்சியை சேர்ந்த சமூக ஆர்வலரும், இயற்கை விவசாயுமான அப்பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் தலைமையில் மேலும் சில விவசாயிகள் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து குப்பை சேகரிக்கும் வண்டியினை தள்ளிக்கொண்டு வீடுகள் தோறும் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வழங்க வலியுறுத்தி, பொதுமக்களின் கால்களில் விழுந்து கோரிக்கை விடுத்தனர். 




என்னது கச்சா எண்ணெய் 100 டாலரா...? யாருக்கு சாதகம்... யாருக்கு பாதகம்... முழு விபரம்!


மேலும் அவ்வாறு குப்பைகளை தரம் பிரித்து கொடுத்தால் மக்கும் குப்பைகளை மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்காத பயிர்களை விளைவிக்க வயலுக்கு இயற்கை உரமாகவும், மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை, பிளாஸ்டிக் சாலைகள் அமைத்தல், சிமெண்ட் ஆலைகளில் அதனை பயன்படுத்த விற்பனை செய்து அதில் வரும் வருவாயில் ஊராட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் போன்றவற்றை எடுத்துக் கூறினார். தூய்மை பணியாளர்களுடன் இயற்கை விவசாயிகள் பொதுமக்களின் கால்களில் விழுந்து குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதன் அவசியத்தை எடுத்துக் கூறிய சம்பவம் ஊராட்சி மக்களிடையே நெகிழ்ச்சியும், மாற்றத்தையும் ஏற்ப்படுத்த துவங்கியுள்ளது.


Shruti Haasan | ‛என் அப்பா பாதுகாப்பாதான் இருந்தாரு...ஆனா...’ - கமல் கொரோனா பாதிப்பு குறித்து ஸ்ருதிஹாசன்!