தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சாரங்கபாணி தெருவில் வாழ்ந்த சீனிவாசனுக்கும் கோமளத்திற்கும், ராமானுஜன்,

  1887 ஆம் ஆண்டு டிசம்பர்  மாதம்  22 ஆம் நாள் ஈரோட்டில் பிறந்தவர். நான்காவது குழந்தையாக பிறந்த,  இவர் மூன்று ஆண்டுகள் வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார். இராமானுஜனின் தந்தையாரும் தந்தைவழிப் பாட்டனாரும் துணிக் கடைகளில் எழுத்தராகப் பணியாற்றி வந்தனர். தாய்வழிப் பாட்டனாரும் ஈரோட்டு முனிசீப்பு நீதிமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் இருந்தார்.




இராமானுசம் தாய்வழி தாத்தா வேலைபார்த்த கடை 1891 ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்திற்கு இடம்மாறியதால், இவர் குடும்பமும் காஞ்சிபுரம் வந்தது. 1892ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்தில் இருந்த தொடக்கப்பள்ளி ஒன்றில் இராமானுசன் தொடக்கக் கல்வியைப் பெறத் தொடங்கினார். 1894 ஆம் ஆண்டில் அவர் தெலுங்கு வழி கல்விக்கு மாற்றப்பட்ட சில நாள்களிலேயே அவரது குடும்பம், கும்பகோணத்தில் சாரங்கபாணித் தெருவில் குடிபெயர்ந்தனர். அங்கு கல்யாணம் தொடக்கப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார். 1897 ஆம் ஆண்டில் மாவட்டத்திலேயே முதலிடம் பெற்று தொடக்கக்கல்வியை நிறைவு செய்தார். 1897 ஆம் ஆண்டில் கும்பகோணம் நகர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். அவ்வாண்டிலிருந்து முறையாகக் கணிதம் கற்கத் தொடங்கினார்.




ராமானுஜனுக்கோ முறையான கல்லூரிப் படிப்பிற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. எவரும் அவரை திருத்திக் கற்பிக்கும் முன்பே,அவர் ஒரு பெரிய கணித வல்லுனர் ஆகிவிட்டார்.  ஆரம்பப் பள்ளியின் இறுதி தேர்வில் மாவட்டத்திலேயே முதலாவதாகத் தேறியதால், அவனுக்கு கும்பகோணம் டவுன் மேல்நிலைப் பள்ளியில் அரைச்சம்பளக் கல்விச் சலுகை கிடைத்தது. 12 வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல்  என்ற பாட புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் அண்டை வீட்டு மாணவனிடமிருந்து கடன் வாங்கி படிக்கத் தொடங்கினான்.




1903 டிசம்பரில் சென்னைப் பல்கலையின் மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதன் காரணமாக கும்பகோணம் அரசுக் கல்லூரியில் F.A. (இக்காலத்து 11, 12 வது) வகுப்பிற்கு உபகாரச்சம்பளம் பெற்றார். அவன் கற்க வேண்டியிருந்த பாடங்கள் ஆங்கிலம், கணிதம், உடற்செயலியல், ரோமானிய கிரேக்க வரலாறு, மற்றும் வடமொழி. ஆனால் கணிதம் தான் அவனுடைய காலத்தையும் சக்தியையும் விழுங்கிக்கொண்டது. கணிதம் தவிர மற்ற அனைத்து தேர்வில் தோல்வியே கண்டான். உபகாரச் சம்பளத்தை இழந்தான். கும்பகோணத்தை விட்டு எங்கோ ஆந்திர மண்ணில் தன்னை இழந்து சுற்றித் திரிந்தான். ஓராண்டு காலம் கழித்துத் திரும்பி கும்பகோணம் அரசுக் கல்லூரிக்கே வந்து சேர்ந்தான். ஆனால் 1905 டிசம்பர் தேர்வுக்கு வேண்டியிருந்த உள்ளமைச் சான்று கிடைக்காததால் தேர்வு எழுத முடியவில்லை. கும்பகோணம் கல்லூரியும் அத்துடன் அவனை இழந்தது.பின்னர் இவர் பச்சையப்பா கல்லூரியிலும் கல்வி கற்றார். இங்கு எஸ்.பி.சிங்காரவேலு முதலியாரிடம் கணிதம் கற்றார். இருவரும் சேர்ந்து விவாதித்து விடை காண்பார்கள்.  கேம்பிரிட்ஜில் ஹார்டியுடன் கூட இருந்த நான்கு ஆண்டுகளும் (1914–1918) இராமானுஜர் பணியாற்றியுள்ளார்.




மோசமான உடல்நிலை காரணமாக கும்பகோணம் திரும்ப வேண்டியிருந்தபோது, தனது நோட்டு புத்தகங்களை தன் வகுப்புத் தோழரிடம் கொடுத்து, ஒருவேளை தான் இறந்து விட்டால், சிங்காரவேலு முதலியார் அல்லது எட்வர்டு பி.ரோஸ் அல்லது மெட்ராஸ் கிரிஸ்டியன் காலேஜுக்கு கொடுத்துவிடும்படி கேட்டுக் கொண்டார். பின்னர் தனது 32 வயதிலேயே மரணமடைந்தார். உலகத்திற்கே கணித மேதையாக இருந்த சீனிவாசராமானுஜரின் பிறந்த நாளை முன்னிட்டு கும்பகோணத்திலுள்ள அவர் வீடு மற்றும்  படித்த நகர மேல்நிலைப்பள்ளியிலுள்ள அவரது உருவ சிலைக்கும், அரசு ஆடவர் கல்லுாரியில் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிரச்சார பாரத் இயக்கத்தின் சார்பில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் எம்பி ராமலிங்கம், பெற்றோர் ஆசிரிய கழக மாநில துணை தலைவர் கல்யாணசுந்தரம், நகர மேல்நிலைப்பள்ளி செயலாளர் வேலப்பன், பழைய மாணவர்கள் சங்க செயலாளர் சிவகுமார், பள்ளி தலைமையாசிரியை விஜயா மற்றும் பலர் கலந்து கொண்டனர். கணித மேதை ராமானுஜரின் அரியவகை கணக்கு கண்டுபிடிப்புகள், அவர் பயன்படுத்திய பொருட்கள் இன்றும் அவரது வீட்டில் காட்சி பொருளாக உள்ளது.