கொரோனா என்னும் பெருந்தொற்றால் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பிடியில் சிக்கியிருந்த உலக நாடுகள் மெல்ல மெல்ல அந்த பாதிப்பிலிருந்து விலக தொடங்கியது. இந்த நிலையில் மீண்டும் ஒமைக்ரான் என்னும் கொரோனாவின் புதிய வேரியண்ட் மக்களுக்கு மீண்டும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது . முந்தயை கொரோனா தாக்குதலை விட இதன் வீரியம் சற்று அதிகமாகவே இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். தமிழகத்திலும் கொரோனாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். உரிய நேரத்தில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட கமல்ஹாசன் அதிலிருந்து மீண்டு தற்போது பிக்பாஸ், விக்ரம் உள்ளிட்ட படப்பிடிப்புகளில் கலந்துக்கொண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டார்.
இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது அப்பா கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிது ஹிந்துஸ்தான் டைம்ஸுன் மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது பேசிய ஸ்ருதி “என் அப்பா அனைத்து பாதுகாப்பு நடவடிகைகளையும் எடுத்திருந்தார். ஆனாலும் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் .ஆனால் அவர் 100 சதவிகிதம் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்துக்கொள்கிறார். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் . கொரோனாவால் எனது நெருங்கிய நண்பர் ஒருவரை இழந்துவிட்டேன், இது யாரை எப்படி , எப்போது பாதிக்கும் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் தடுப்பூசி கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் என நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 22 அன்று கமல்ஹாசன் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு கொரோனா பாசிட்டிவ் வந்தது குறித்து கமல் ட்வீட் செய்திருந்தார். அதில் அவர் “நான் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு எனக்கு லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதியானது. மருத்துவமனையில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். COVID-19 பரவல் மறையவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”. என குறிப்பிட்டிருந்தார். மருத்துவமனையில் தனிமைப்படுத்திக்கொண்ட கமல்ஹாசன் டிசம்பர் 1 ஆம் தேதி எஸ்ஆர்எம்சி மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.