1.ஜனவரி 28 - புல்லட் பைக் திருடன் கைது 


மயிலாடுதுறையில் பல்வேறு ஊர்களில் ராயல் என்பீல்டு புல்லட் பைக்குகளை குறித்து வைத்து திருடி வந்த ராயல் திருடன் மணிகண்டனை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில் அவரிடம் இருந்து 3 ராயல் என்பீல்டு பைக்குகள் பறிமுதல் 




2.பிப்ரவரி 25- தனி மாவட்டமாக மாறிய மயிலாடுதுறை 


நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாளாக இருந்த நிலையில் கடந்தாண்டு டிசம்பர் 28ஆம் தேதி மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி மயிலாடுதுறைக்கு புதிய ஆட்சியர் நியமிக்கப்பட்டு பிப்ரவரி 25ஆம் தேதி முதல் முறைப்படி மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் செயல்பட தொடங்கியது.



3.பிப்ரவரி 27 - வடமாநில இளைஞர் என் கவுண்டர்


கடந்த பிப்ரவரியில் சீர்காழி ரயில்வே ரோட்டில் வசித்து வரும் தங்க நகை வியாபாரி தன்ராஜ் என்பவர் வீட்டில்  தாய், மகனை கொன்று 12.800 கிலோ தங்கம் மற்றும் 6.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பிய மணிபால் சிங் என்பவர் என் கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் 3 பேர் கைது.


4.மார்ச் 07 - தன் வீட்டிற்கு தானே தீ வைத்து கொளுத்திய இளைஞர்


சீர்காழியை அடுத்த செம்மங்குடி கிராமத்ததை சேர்ந்த 25 வயது இளைஞர் செல்வமணி, மதுபோதையில் தனது கூரை வீட்டை தானே தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



5.ஏப்ரல் 29 - 20 ஆண்டுகளுக்கு பின் நடந்த வைதீஸ்வரன் கோயில் குடமுழுக்கு


வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான வைத்தியநாத சுவாமி கோயிலில் உள்ளது. செவ்வாய் தலமாக பரிகாரத்தலம் இக்கோயிலில் 1998-ஆம் ஆண்டு திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதன்பின்னர் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது



6.மே 02 - அதிமுக கோட்டையினை தன்வசம் ஆக்கிய திமுக!


தமிழகத்தில் 38ஆவது மாவட்டமாக உருவான மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிளிலும் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரே சட்டமன்ற உறுப்பினர்களே தேர்வாகி இருந்த நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 3 தொகுதிகளையும் திமுகவே கைபற்றியது.




7.ஜீன் 19 - சுருக்குமடி வலை மீதான தடையை நீக்க கோரி மீனவர்கள் போராட்டம்


அரசால் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்துவது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இரு பிரிவுகளாக மீனவர்களுக்கு இடையே நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வருகிறது. சுருக்கு மடி மீனவர்களையும் கடலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என கூறி சுருக்கு மடி வலை பயன்படுத்தும் மீனவர்கள் அவர் அவர் கிராமங்களில் மூன்று தினங்களாக தொடர்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.




8.ஜீலை 07 - பள்ளி ஆசிரியர் போஸ்சோவில் கைது


மயிலாடுதுறை பள்ளி ஒன்றில் பணியாற்றிவந்த உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை மீது முன்னாள் மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரில் போக்சோ சட்டத்தில் கைதாகி சிறை சென்ற சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



 


9.ஆகஸ்ட் 25 - ஊரைவிட்டு ஒதிக்கி வைக்கப்பட்ட ஆறு குடும்பங்கள்


கீழமூவர்க்கரை மீனவர் கிராமத்தில், அம்மன் கோயிலில் வெண்கல படிக்கட்டு செய்து பெயர் பதிப்பதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக 6 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில் பாதிக்கபட்டவர்கள் சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது




10.செப்டம்பர் 9 - தனது பணியை திமுகவினருக்கு வழங்கியதால் குத்தாலம் பேரூராட்சியில் வேலை செய்த பெண் தற்கொலை


குத்தாலம் பேரூராட்சியில் தூய்மை பணியில் பரப்புரையாளராக பணியாற்றிய 4 பெண் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதால் மனமுடைந்து விஷம் குடித்த நதியா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.




11.அக்டோபர் 8 - ஊரைவிட்டு ஒதுக்கியதால் குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தந்தை


தொடுவாய் மீனவர் கிராமத்தில்  மீனவர் ராமையா என்பவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறி ஊர்மக்களால் ஒதுக்கிவைக்கப்பட்டதால் விரக்தியில் தனது 15 வயது மகள் மற்றும் 10 வயது மகனுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது



 


12.நவம்பர் 14 - நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் பரிசு


ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தை  இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், கூறி சூர்யாவை தாக்கும் நபருக்கு ஒரு லட்சம் பரிசு என பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.  


 



13.நவம்பர் 22 - கொள்ளிடத்தில் வெள்ளம் - சிக்கிய கால்நடைகள் பாதுகாப்பாக மீட்பு


கனமழையால் கொள்ளிடம் ஆற்றில் 1.5 லட்சம் கன அடி தண்ணீர் சென்ற நிலையில்  நவம்பர் 12ஆம் தேதி ஆற்றில் சிக்கிய 25 மாடுகளையும் 22 ஆம் தேதி திட்டுப்பகுதியில் சிக்கிய 150 ஆடுகளையும் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.




14.நவம்பர் - இயல்பை விட கூடுதலாக பொழிந்த 40% மழை 


மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு சராசரி மழை பொழிவை விட கூடுதலாக 40% மழை பொழிந்துள்ளது. மழையால் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்களும் 560 வீடுகளும் சேதமடைந்த நிலையில் 245 கால்நடைகள் உயிரிழந்தன. 



 


15.டிசம்பர் 6 - அம்பேத்கர் நினைவு தினத்தில் இரு சமூகத்தினர் மோதல் 


டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தில் மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி கிராமத்தில் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் விசிக கட்சியினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.  



16.நான்கு வழி சாலை தொடர்பாக இரண்டு ஆண்டு தொடர் போராட்டம்


விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை எண் 45ஏ நான்கு வழி சாலை அமைப்பதற்கான பணிகள் கடந்த இரண்டு ஆண்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் முதல் பொறையார் வரை நான்கு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கி பணிகள் நடைபெற்று வருகிறது. கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால் பொதுமக்களும் விவசாயிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர்.