சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா ( Arignar Anna Zoological Park )


சென்னை புறநகர் பகுதியில் செங்கல்பட் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள, மிக முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு தனி இடம் உண்டு. இந்த பூங்காவில் புலி, சிங்கம் , யானை, கரடி, வெள்ளைப்புளி, பாம்பு வகைகளில் ராஜநாகம், உள்ளிட்ட பல்வேறு வகையான பாம்புகள். பறவை வகைகளில் மயில், கிளி, பஞ்சவர்ண கிளி, உள்ளிட்ட பறவை வகைகளும், இதுபோக பிற விலங்கு வகைகளில் மான், நீர்யானை ,நீர்நாய், பல்வேறு வகையான குரங்குகள் மனித குரங்குகள் என இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதி சேர்ந்த பொதுமக்களை தவிர தமிழகம் முழுவதும் இருந்து ஏராளம் பார்வையாளர்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருடந்தோறும் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவை தரம் உயர்த்த தமிழக அரசு மற்றும் வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


3d மற்றும் 7d திரையரங்கம்


இந்தநிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் தமிழக அரசு வனவிலங்குகள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த 3d மற்றும் 7d திரையரங்கம் அமைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் "தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு பிறப்பித்த அரசாணையில் இது குறித்து கூறியிருப்பதாவது: சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்களை பாதுகாப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பார்வையாளர்கள் புதிய வழிமுறையில் வனவிலங்குகளை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில்,  பூங்கா அருங்காட்சியகத்தில் பல்வேறு உயிரினங்களின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்படும் எனவும், இதற்காக ரூபாய் 4.36 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் , பணிகளை 3 ஆண்டுகளில் முடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த கருத்துருவை அரசு ஏற்றுக்கொண்டு அதற்கான நிர்வாக அனுமதியை வழங்கியுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர