மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் 26 வயதான ரெட் தினேஷ் என்கின்ற தினேஷ். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. இந்நிலையில், சீர்காழி அருகே கோவில்பத்து கிராமத்தில் காரில் அமர்ந்து நண்பருடன் தினேஷ் நேற்று மது அருந்தியுள்ளார். அப்பொழுது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் 4 பேர் கொண்ட கும்பல் தினேஷை சுற்றி சுற்றி வளைத்துள்ளனர். 

இதனை அடுத்து அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய தினேஷை  சராமாரியாக ஓட ஓட அரிவாளால் வெட்டி விட்டு அந்த கும்பல் தப்பி ஓடி சென்றுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சீர்காழி காவல்துறையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்த தினேஷை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர்.

Chennai Egmore : அடுத்து 3 ஆண்டுகளில் நவீனமாக மாறும் எழும்பூர் ரயில் நிலையம்... ரூ. 734.91 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் தொடக்கம்...

பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு தினேஷ் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்கு அனுமதித்த சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக உயிழந்தார். அதனைத் தொடர்ந்து தினேஷின் உடலை உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்து இதுகுறித்து சீர்காழி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தினேஷ் மீது குண்டாஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் இருந்து சமீபத்தில் வெளியே வந்துள்ளது குறிப்பிடதக்கது. இச்சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜீத் நடித்த துணிவு படம் வெற்றி பெற வேண்டி சபரிமலையில் மயிலாடுதுறை அஜித் ரசிகர்கள் பேனர் வைத்து வழிபாடு.

பொங்கல் பண்டிகைக்கு விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் படங்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக மோதுவது ரசிகர்களிடையே பெரும்  எதிர்பார்ப்பையும், ஆவலையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இரண்டு பேருக்கும் சரிசமமாக திரையரங்குகள் சமமாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து இரு தரப்பு ரசிகர்களும் பல்வேறு வேண்டுதல்கள் மற்றும் விளம்பரங்களை செய்து வருகின்றனர்.  அண்மையில் விஜய் ரசிகர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் விஜயின் நடிப்பில் பொங்கலுக்கு வெளி வரும் வாரிசு படம் வெற்றி பெற வேண்டி பேனர் வைத்து வழிபாடு நடத்தினர்.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் போல் அஜித் ரசிகர்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அஜித்தின் துணிவு திரைப்படம் வெற்றி பெற வேண்டி பேனருடன் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மயிலாடுதுறையை சேர்ந்த ஐயப்பன் மகேஷ் சூர்யா ஆகிய மூன்று ரசிகர்கள் அஜித்தின் துணிவு படம் வெற்றி பெற வேண்டி வழிபாடு செய்தனர். இருதரப்பு ரசிகர்களும் தங்களின் தலைவரின் படம் வெற்றி பெற வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Thiruppavai 11: மார்கழி 11...தொழில் தர்மத்தையும் தீமைகளை எதிர்ப்பவனையும் போற்றுவர்: இன்றைய திருப்பாவை!