நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழை நாடுகளின் லூர்து எனப் போற்றப்படுவது மட்டுமின்ற பசலிக்கா அந்தஸ்து பெற்றது.  இப்பேராலயத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெறும்.

 

வேளாங்கண்ணி பேராலய வளாகத்தில் விண்மீன் ஆலயம் அருகே உள்ள புனித சவேரியார் திடலில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள்  நள்ளிரவு மறையுரை, கூட்டுத் திருப்பலியுடன் சிறப்பு வழிபாடுகள் தொடங்கப்பட்டன. தமிழ் , ஆங்கிலம், மலையாளம், கன்னடம், உருது  உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் தலைமையில் உதவி பங்குத் தந்தையர்கள் வழிபாடுகளை மேற்கொண்டனர்.



 

திருப்பலியின் நிறைவில், தேவதைகளாக வேடமிட்டிருந்த சிறுமிகள் அளித்த குழந்தை இயேசுவின் திருச்சொரூபத்தை, பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார் பெற்றுக் கொண்டு, இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில் குழந்தை இயேசு சொரூபத்தை பக்தர்களுக்குக் காட்சிப்படுத்தி, கிறிஸ்துமஸ் குடிலில் வைத்தார். அப்போது, பக்தர்கள் மண்டியிட்டு இறைப் புகழ்ச்சி வசனங்களுடன் வழிபாடு மேற்கொண்டனர். பேராலய நிர்வாகம் வாழ்த்துச் செய்தி அறிவித்தபோது, பக்தர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

 

கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில், பேராலய தியான மண்டபம் செல்லும் சாலையில் சுமார் 1கி.மீ  நீளத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட  பந்தல் மற்றும் நுழைவாயில் வளைவு , கீழ் கோயிலுக்கு செல்லக்கூடிய பாதை , விண்மீன் ஆலயத்திற்கு செல்லக்கூடிய பாதை மற்றும் ஆலயத்தை சுற்றி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன

கிறிஸ்துமஸ் விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்துவ தேவாலயங்களிலும் கிறிஸ்மஸ் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.



 

புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 466ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றம் கோலாகலமாக துவங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.  ,மனோராக்களிலும் ஏற்றப்பட்ட கொடி கண்டு இஸ்லாமியர்கள் பக்தி பரவசம்.

 


புகழ்பெற்ற இஸ்லாமிய வழிபாட்டு தலமான நாகூர் தர்காவின் 466-ம் ஆண்டு கந்தூரிவிழா இன்று கொடியேற்றத்துடன்  கோலாகலமாக துவங்கியது. கந்தூரி விழாவின் கொடியேற்றத்திற்காக வருடந்தோறும் பயன்படுத்தப்படும் சிறப்புக்கொடியானது சிங்கப்பூரிலிருந்து நாகைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் முதுபக்கு எனும் இந்த சிறப்புக்கொடியை எடுத்து வரும் கப்பல் வடிவரதம், செட்டிபல்லக்கு, சாம்பிராணிசட்டி போன்ற ரதங்கள் ஊர்வலமாக நாகையிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக நாகூர் வந்தடைந்தன. பேண்டு வாத்தியம் முழங்க, ஆண்டவரின் பாடலை தாஹிரா இசையுடன் இசைத்து வந்த பக்கீர்மார்கள் மற்றும் இஸ்லாமியர்கள் கொடியினை வரவேற்றனர். அதனை தொடர்ந்து நாகூர் தர்காவில் கொடிக்கு தூ-வா ஓத, வாணவேடிக்கை முழங்க நாகூர் ஆண்டவர் தர்காவிலுள்ள 5 மினாராக்களிலும் கொடியேற்றப்பட்டது. அப்போது வண்ணமயமான வான வேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டன.



கந்தூரி விழாவின் கொடியேற்றம் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு நாகூர் ஆண்டவரை பிராத்தித்து துவா செய்தனர். கந்தூரி விழாவையொட்டி பக்தர்களின் பாதுகாப்பு கருதி நாகை மற்றும் நாகூரில் 1000,க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நாகூர் தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத்-எனும் சந்தனக்கூடு விழா ஜனவரி 2,ம் தேதி நாகையிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளாக வளம் வந்து மூன்றாம் தேதி  அதிகாலை சந்தனம் பூசும் வைபவம் நடைபெற உள்ளது.