தஞ்சையில் நடைபெற்ற இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநில குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில குழு கூட்டம் தஞ்சை மாவட்ட சிபிஐ அலுவலகத்தில், முன்னாள் எம்எல்ஏவும், மாநில தலைவருமான பத்மாவதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பெண்களுக்கான 33 சதவிகித ஒதுக்கீட்டிற்கான மசோதா முதன்முதலாக நாடாளுமன்றத்தில் 1996 செப்டம்பர் 12 அன்று தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு பிறகு 2010 மார்ச் 10 ஆம் தேதி மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு மாநிலங்களவையில்

  நிறைவேற்றப்பட்டு 11 ஆண்டுகள் முடிந்து விட்டது.




தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் உள்ள பாஜக அரசு 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மசோதாவை மக்களவையில் இதுவரை தாக்கல் செய்யாமல் பெண்களை ஏமாற்றி வருகிறது.  பெண்கள் நலனில் அக்கறையுள்ள தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான தனித் தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கு, செயல் திட்டங்களுக்கு நிர்பயா நிதியை முறையாக, முழுமையாக பயன்படுத்த வேண்டும் .கடந்த வருடத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு நிர்பயா நிதியில் சுமார் 190.68 கோடி வழங்கி உள்ளது.அதில் 6 கோடியை மட்டும் தமிழ்நாடு அரசு பயன்படுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பெண்களின் பாதுகாப்பான செயல் திட்டங்களுக்கு நிதியை முழுமையாக பயன்படுத்தி பெண்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.


கிராமப்புற ஏழைகளுக்கு,    அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றுகின்ற வகையில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட  நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற வலியுறுத்த வேண்டும். சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் மத்திய மோடி அரசு,  ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், புதிய மின்சார சட்டத் திருத்தம் மற்றும் சுற்றுச்சூழல் வரைவு திட்டம்-2020 திரும்ப பெற வேண்டும் என்று ஓரா ண்டுகளாக தொடர்ந்து உறுதியுடன் போராடி பல்வேறு அடக்குமுறைகளையும் துன்பங்களையும் துயரங்களையும் எதிர்கொண்டு வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ள விவசாயிகளுக்கு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தனது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.


 




தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை முடக்க கூடாது, தொடர்ந்து நடத்த வேண்டும், இந்த திட்டம் மாநகராட்சிக்கும், பேரூராட்சிக்கும் விரிவுபடுத்த வேண்டும். குடும்ப வன்முறை சட்டம் பற்றி போதிய விழிப்புணர்வு பெண்கள் மத்தியில் இல்லாமல் இருக்கிறது, விழிப்புணர்வு இல்லாததால் பெண்களின் துன்பம் தொடர்கிறது, தமிழ்நாடு அரசு இதுபற்றிய கவனத்துடன் பெண்களை குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாக்க வேண்டும், குடும்ப வன்முறை சட்டம் 2005 அடிப்படையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.


மத்திய அரசு பெண்களின் திருமண வயதை 18 இல்  இருந்து 21 ஆக உயர்த்தும் அறிவிப்பை இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. இது குறித்த சமீபத்திய மத்திய அமைச்சரவை கூட்ட முடிவால் எந்தவித நன்மைகளும் பெண்களுக்கு விளையப்போவது இல்லை, பெண்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவே திருமண வயதை உயர்த்தியதாக அறிவிக்கும் மத்திய அரசு, உண்மையில் பெண்கள் மீது அக்கறை இருந்தால் பெண்கள், குழந்தைகள் சத்துக் குறைபாட்டால் உள்ளதையும், ஆரோக்கியம் சீர் கெடாமல் பாதுகாக்கவும், பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சம ஊதியம் உள்ளிட்ட நலத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.