மயிலாடுதுறை, திருவாரூர் சாலை பட்டமங்கல புதுத்தெருவைச் சேர்ந்த 66 வயதான அறிவாளி என்பவரும் அவரது மனைவி 56 வயதான திலகவதியும் சேர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் பட்டமங்கல புதுத்தெருவில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திலகவதி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்க தாலி சங்கிலியை பறித்து சென்றுள்ளார்




கோடநாடு கொலை வழக்கில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் விசாரணை..!


இந்த வழிபறி சம்பவம் தொடர்பாக அறிவாளி, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து  தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபரை குறித்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் பெண்ணிடம் தாலி செயினை பறித்து சென்றவனை அடையாளம் கண்டுபித்தனர்.




கறுப்பை மட்டுமே பேசுபவர்கள், காவியின் கருத்தை அறிய முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது - முதல்வரை ஆதீனங்கள் சந்தித்தது தொடர்பாக தமிழிசை சூசக பேச்சு


அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட  நபர் மயிலாடுதுறை தாலுக்கா, காளி அதிமானபுருஷன் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் 22 வயதான கர்ணன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து கர்ணனை மயிலாடுதுறை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து களவாடப்பட்ட  6 சவரன்  தாலிச் செயின் மற்றும் வழிபறியில் ஈடுபடும் போது பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். 


பிரதமரை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு புன் சிரிப்புடன் பேட்டியை முடித்து கொண்ட என்.ரங்கசாமி


தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்களில் இவருக்கும் தொடர்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய மயிலாடுதுறை காவல்துறையினர், பின்னர் கைது செய்யப்பட்ட கர்ணனை மயிலாடுதுறை நீதிமன்றம் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் அவ்வப்போது செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்ட சூழலில் இது போன்று இன்னும் பல செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களையும் விரைந்து கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் காவல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.