மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நூற்றாண்கள் பழமை வாய்ந்த அருள்மிகு புற்றடி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. பிரகாரத்தில் பேச்சியம்மன், துர்க்கை, நாகர், ஆஞ்சநேயர், ஐயப்பன் ஆகிய சுவாமிகள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். இத்தலத்தில் திருமண வரம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதலை முன்வைக்கும் பக்தர்கள் அவை நிறைவேறியதும் அம்பாளுக்கு மாவிளக்கு இட்டு நேர்த்திக்கடன் செலுத்தி தீ மிதிப்பது வழக்கம். ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் தீமிதி விழாவில் பிரார்த்தனை நிறைவேறிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தீமிதி திருவிழா அவை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கலாய்க்கப்பட்டாரா விஜய்... விக்கி மீது கோவத்தில் விஜய் ரசிகர்கள்!
இத்தகைய சிறப்பு பெற்ற கோயில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு நிகழ்வை செய்திட கோயில் நிர்வாகிகள் முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து திருப்பணி பணிகளை மேற்கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவு செய்தனர். அதனை தொடர்ந்து இன்று காலை குடமுழுக்கு நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 26 ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து இன்று காலை ஏழாம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து பூர்ணாஹூதி மகா தீபாராதனை நடைபெற்றது.
கோவை: காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்த 2 போலீசார் கைது; 3 ஆண்டுகளாக தொடர்ந்து அரங்கேறிய அவலம்
தொடர்ந்து யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை வலம் வந்து விமான கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து வேத விற்பன்னர்கள் வேத மந்திரம் ஓத, சிவாச்சாரியார்கள் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கை நடத்தி வைத்து, கோயிலை சுற்றி திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீரை வாரி இறைத்தனர்.
பின்னர் கருவறையில் உள்ள புற்றடி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதினம் இருபத்தி ஏழாவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வரதட்சணை கொடுமை; ஆனால் கைது நடவடிக்கை இல்லை” : ஐ.ஆர்.எஸ் அதிகாரி மீது புகார் அளித்த மனைவி!