தமிழகத்தில் தேர்தல் அறிக்கையின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியை ஏற்ற நாள் முதல் இந்த தொகை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு குடும்ப தலைவிகள் மத்தியில் இருந்து வந்தது. அதுமட்டுமின்றி இத்தொகை வழங்குவது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் நிலவியது. அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் வித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அறிவித்தார்.




பல்வேறு நிபந்தனைகளுடன் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ள நிலையில், அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒன்றாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள்  ஜூலை 20 -ம் தேதி முதல் வீடு வீடாக வழங்கும் பணி தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து ஜூலை 24-ம் தேதி முதல் முகாம்கள் நடைபெற உள்ளது. இரண்டாம் முகாம் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த இரண்டு முகாம்களிலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவுத்தப்பட்டுள்ளது.


CUET Result 2023: CUETமுதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு; எப்படி ரிசல்ட் பார்க்கணும்? இதை படிங்க...!




விண்ணப்பங்கள் கடைகளில் முதற்கட்டமாக 60 சதவீதமும், இரண்டாம் கட்டமாக 40 சதவீதமும் செயல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது- சில இடங்களில் 500 குடும்ப அட்டை உள்ள கடைகளில் முதற்கட்டமும், 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளில் இரண்டாம் கட்டமும் பணிகள் நடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம்  மணல்மேடு பேரூராட்சி மற்றும் திருமங்கலம் ஆகிய இடங்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி  நடைபெற்றது. அமைச்சர் மெய்ய நாதன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன், மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


CM Stalin EXCLUSIVE Interview: செந்தில் பாலாஜிக்கு முக்கியத்துவம் ஏன்? சர்ச்சையை தவிர்க்கலாமே! உதய் எப்படி ? - ஓபனாக பேசிய ஸ்டாலினின் மெகா எக்ஸ்குளுசிவ்!




அதனைத் தொடர்ந்து  மயிலாடுதுறை மாவட்டத்தில் கலைஞர் மகளிர்  உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பம் நேற்று முதல் வழங்கப்படுகிறது. அவ்வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் திட்டத்தினை குத்தாலம் ஒன்றியம் தத்தங்குடி ஊராட்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பொது மக்களுக்கு வீடு வீடாக சென்று விண்ணப்பங்கள் மற்றும் அதற்கான டோக்கனை வழங்கி துவக்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் மற்றும் பொதுவிநியோக திட்ட அலுவலர்கள் வருவாய் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.