CUET PG Result 2023: CUETமுதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு; எப்படி ரிசல்ட் பார்க்கணும்? இதை படிங்க...!
மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான CUET தேர்வு முடிவுகள் வெளியானது.

CUET Result 2023: மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான CUET தேர்வு முடிவுகள் வெளியானது.
CUET தேர்வு
Just In




மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டது. அதே நேரத்தில் மாநில அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் CUET நுழைவுத் தேர்வைப் பின்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும் முதுகலை படிப்புக்கு நுழைவுத் தேர்வு இதுவரை கட்டாயம் ஆக்கப்படவில்லை.
இந்த சூழலில்,மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் 2023-24ஆம் கல்வி ஆண்டுக்கானமுதுகலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET) ஜூன் மாதம் 1 முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 295 நகரங்களில் நடந்த CUET நுழைவுத்தேர்வை 9,76,908 மாணவர்கள் எழுதினர். கணினி முறையில் சுமார் 20 பாடங்களுக்குத் தேர்வு நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்தியது.
தேர்வு முடிகள் வெளியீடு
,இந்நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான CUET தேர்வு முடிவுகள் வெளியானது. மாணவர்கள் https://cuet.nta.nic.in/ என்னும் இணைய முகவரியை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளைக் காணலாம். முன்னதாக, விடைக் குறிப்புகளை ஆட்சேபிக்கஜூலை 13 முதல் ஜூலை 15 வரை தேதி வழங்கப்பட்டது.
இதில் 5,386 விடைத்தாள் ஆட்சேபனைகள் பெறப்பட்டன. இதில் 1,422 வெவ்வேறானவை. இந்தத் தகவல்கள் அனைத்தையும் பார்த்து, திருத்தி முடிவுகளை எடுக்கக் கூடுதல் நேரம் தேவைப்பட்டது என்று யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி பார்ப்பது?
- CUET PG-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cuet.nta.nic.in என்ற இணையத்திற்கு செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் உள்ள CUET PG 2023 என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- பின்னர், பதிவு எண், பிறந்த தேதி/கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.
- இதனை அடுத்து, உங்களுடைய மதிப்பெண்கள் பார்த்து, அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க