Ola S1 X+ Price Cut: விலை குறைப்பு நடவடிக்கையை தொடர்ந்து ஓலா நிறுவனத்தின் S1 X+ மாடல் மின்சார ஸ்கூட்டரின் விலை, 89 ஆயிரத்து 999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓலா மின்சார ஸ்கூட்டர்:
இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஓலா எலக்ட்ரிக், அதிகமான விலை நிர்ணயிப்பு நடவடிக்கையால் விற்பனையில் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட S1 X மற்றும் S1 X+ ஆகிய மாடல்கள் இதற்கு உதாரணமாகும் . இந்நிலையில், "டிசம்பர் டு ரிமெம்பர்" என பெயரில், ஓலா நிறுவனம் தனது மின்சார ஸ்கூட்டரளுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது.
ரூ.20,000 தள்ளுபடி:
இந்நிலையில் தான் யாரும் எதிர்பாராத விதமாக S1 X+ மாடலின் விலையை 20 ஆயிரம் ரூபாய் குறைத்து ஓலா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 999 ரூபாய் ஆக இருந்த அறிமுக விலை தற்போது, 89 ஆயிரத்து 999 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்திற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிய நிலையில், இந்த மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் விநியோகம் தொடங்கும் என எதிபார்க்கப்படுகிறது.
இந்நிலையில், டிசம்பர் மாதத்தில் முன்பதிவு செய்யப்படும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் 2 kWh பேட்டரி கொண்ட S1 X மாடலின் விலையும், 3 kWh பேட்டரி கொண்ட S1 X + மாடலின் விலையும் 89 ஆயிரத்து 999 ரூபாய் ஆக உள்ளது. எனவே, S1 X மாடல் அதே பழைய விலைக்கு இனி விற்பனை செய்யப்படுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அதேநேரம், 3 kWh பேட்டரி திறன் கொண்ட போட்டி நிறுவனங்களின் அனைத்து மாடல்களின் விலையும் சுமார் ரூ. 1.3 லட்சத்திற்கு மேல் உள்ளது. இந்த சூழலில் ஓலா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் 40 ஆயிரம் ரூபாய் வரையிலான குறைந்த விலையில் கிடைப்பது, அந்நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.
S1 X + பேட்டரி விவரங்கள்:
Ola S1 X+ என்பது S1 Air இன் சற்றே மேம்படுத்தப்பட்ட எடிஷனாகும். சற்று வித்தியாசமான வடிவமைப்பு அழகியலைக் கொண்டுள்ளது. தொடக்கக்காரர்களுக்கு, S1 X வரம்பில் உள்ள மின்சார ஸ்கூட்டர்கள் ஒரு வித்தியாசமான ஹெட்லைட் அமைப்பை கொண்டுள்ளன. இது ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்குகிறது.
புதிய LCD இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், டச் அல்லாத பேனல் ஆகியவற்றை கொண்டு இருந்தாலும், S1 Air, S1 மற்றும் S1 Pro உடன் ஒப்பிடும் போது குறைவான அம்சங்களைக் கொண்டுள்ளது. S1 X+ இல் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் 5-இன்ச் யூனிட் ஆகும், இதில் பல பிரிவுகள் கொண்ட அணுகுமுறை, கீலெஸ் அன்லாக் மற்றும் ஸ்மார்ட் கனெக்டிவிட்டி உள்ளது. பவர்டிரெய்ன்களைப் பொறுத்தவரை, S1 X+ ஆனது நிலையான 3 kWh பேட்டரியைப் பெறுகிறது, இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கிமீ தூரம் பயணிக்கலாம். மோட்டார் 6 kW உச்ச ஆற்றலைக் கொண்டுள்ளது. இதன் மூலம் மணிக்கு 90 கிமீ வேகத்தில் பயணிக்க முடிகிறது. Eco, Normal மற்றும் Sports ஆகிய மூன்று ரைடிங் மோட்களை கொண்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI