மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை தாலுக்கா அருவாப்பாடி ஊராட்சி, வை.பட்டவர்த்தி கிராமத்தில் நீடுரை சேர்ந்த அமீனுல்லா என்பவருக்குச் சொந்தமான இடத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ராட்சத குழாய்களை இறக்குவதற்கான கிடங்கை ஏற்படுத்தி 9 ஆயிரம் ராட்சச குழாய்களை இறக்கி வைப்பதற்கான பணிகளை கடந்த வாரம் துவங்கினர்.




Watch Video: பரீட்சை அட்டைக்குள் திரையில் ஓடிய வாட்ஸ் அப்.. நூதனமாக காப்பி அடித்த பள்ளி மாணவன்!


இந்நிலையில், இதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் அந்நிறுவனம் ஐந்துக்கு மேற்பட்ட கனரக வாகனங்கள் மூலம் ராட்சத குழாய்களை கொண்டு வந்து அப்பகுதியில் இறக்கினர். இதையடுத்து குழாய்களை அப்புறப்படுத்தக் கோரி நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 




7.5% Reservation: 7.5% இடஒதுக்கீடு செல்லும்.. அதிரடியாக உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்.. முழு விவரம்!


மேலும், அந்த இடத்தில் மக்கள்திரள் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர். இந்த சூழலில் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் காவல்துறையினர், மற்றும் வருவாய் துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். பொது மக்களுக்கு நடத்திய அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், ராட்சத குழாய்களை அப்புறபடுத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக கிராம மக்களும் பல்வேறு தரப்பு பற்றி கூறவும் உறுதிபட தெரிவித்தனர்.




Crime : பள்ளிக்கு செல்லாத மாணவி.. சந்தேகம்.. வாயில் பூச்சி மருந்தை ஊற்றிய தந்தை.. சென்னையில் பகீர் வன்முறை..


அதனை தொடர்ந்து, கிராம மக்களின் எதிர்ப்புக்கு பணிந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அந்த இடத்தில் இறக்கி வைத்திருந்த ராட்சத குழாய்களை மீண்டும் கனரக வாகனங்களில் ஏற்றிச்சென்றனர். இதனை அடுத்து, அப்பகுதி மக்கள் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன் தலைமையில் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். மேலும், பொதுமக்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து துரிதமாக நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் உடன்பட்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகத்துக்கும்  பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.




மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளுவது மிகவும் கண்டனத்துக்கு உரியது என்றும் அதுமட்டுமின்றி இது சட்டத்திற்கு புறம்பான செயல் என மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பினர் கருத்து தெரிவித்து உள்ளனர்.