சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் அருண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது மகள் அரசுப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தனது மகள் பள்ளிக்கு செல்வதில்லையோ என்று சந்தேகமடைந்த அருண் பள்ளிக்கு சென்று விசாரித்தபோது, ஒரு மாத காலமாக மாணவி பள்ளிக்கு வராததும் அப்பகுதியை சேர்ந்த வாலிபருடன் வெளியிடங்களில் சுற்றி வந்ததும் தெரிய வந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த அருண், மாணவியை சரமாரியாக அடித்ததுடன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை மகளின் வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது. மகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள், அவளை மீட்டு சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
இந்த விவகாரம் குறித்து மணிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அருணிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் , ”அருணின் மகள் ஒரு அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சமீபகாலமாகத் தன் மகளின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அருண், அவள் படிக்கும் பள்ளிக்குச் சென்று மகள் குறித்து விசாரித்துள்ளார்.
விசாரித்ததில் அருணின் மகள் கடந்த ஒரு மாத காலமாகப் பள்ளிக்கே வரவில்லை என்று தகவல் தெரிவித்துள்ளனர் ஆசிரியர்கள். இதனையடுத்து என்ன நடந்தது என்று விசாரித்ததில், அவரின் மகள் பள்ளிக்குச் செல்லாமல், அந்த பகுதியில் உள்ள ஒரு வாலிபருடன் ஊர் சுற்றியது தெரியவந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அருண் அவரின் மகளை சரமாரியாக அடித்துள்ளார். அதோடு, வீட்டிலிருந்து பூச்சி கொல்லி மருந்தை மகளின் வாயில் ஊற்றியுள்ளார். மகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள், அவளை மீட்டு சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்” இதனையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றோம் என தெரிவித்தனர்.
தந்தையின் இச்செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாணவியிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க:ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் திரும்பி பார்க்க வைத்த அல்லூரி சீதாராமராஜூ - யார் இவர்?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்