திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம் என மயிலாடுதுறையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மண்டல மையத்தை திறந்துவைத்த பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி தெரிவித்தார். 




தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் சென்னை சைதாப்பேட் டையில் செயல்பட்டு வருகிறது. இங்கு, அறிவியல், கணிதம் உள்ளிட்ட 81 இளநிலை, முதுநிலைப் பட்டம், பட்டயம் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் தொலைநிலை வழியில் கற்றுத் தரப்படுகின்றன. இவற்றில் மொத்தம் 28,957 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே, தொலைநிலைக் கல்வியின் மேம்பாட்டுக்கு, உயர்கல்வித் துறை சார்பில் பல்வேறுநடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.




புளியந்தோப்பில் வீட்டில் தனியாக இருந்த திருநங்கை தூக்கிட்டு தற்கொலை



இந்நிலையில் மயிலாடுதுறையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் மண்டல மையம் நேற்று தொடங்கப்பட்டது. தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களை ஒருங்கிணைந்து இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி தலைமை வகித்து மையத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 8 மண்டல மையங்கள் செயல்பட்டு வருகிறது, புதிதாக  மயிலாடுதுறை, திருவண்ணாமலை, சிவகங்கை, சேலம் ஆகிய இடங்களில் 4 மண்டல மையங்களை தொடங்க அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் மயிலாடுதுறையில் 9 ஆவது மையம் தொடங்கப்பட்டுள்ளது. 




Shivani Net Worth: 19 வயதிலேயே பிஎம்டபிள்யூ கார்... பிக்பாஸ் ஷிவானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?


தொலைநிலை கல்வியில் யூஜிசி அங்கீகாரம் அளித்துள்ள பட்டப்படிப்பு, முதுநிலை பட்டபடிப்பு, எம்.பில், முனைவர் படிப்புகள் நடைபெற்று வருவதாகவும், புதிதாக இந்த ஆண்டு முதல் டாக்டரேட் முடித்தபிறகு டாக்டர் ஆப் லிட்டரேச்சர், டாக்டர் ஆப் சயின்ஸ் படிப்பதற்காக நமது பல்கலைக்கழகத்தில் கொண்டு வந்துள்ளோம். இதில் படிக்கக்கூடிய அனைத்தும் அரசு வேலைவாய்ப்பிற்கு உகந்தது. மேலும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படிப்பதால் எந்த மாணவர்கள் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம் என்றார். தொடர்ந்து மயிலாடுதுறை மையத்தில் பட்டப்படிப்பு படிப்பதற்கான சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், இணை இயக்குனுர் அறிவுடைநம்பி, விரிவாக்க கல்விப்புலம் தலைவர் தியாகராஜன், இணை இயக்குனர் தமிழ்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


CBSE Question Paper Leak: ‛சிபிஎஸ்இ தேர்வில் முறைகேடு: தேர்வுகளை ரத்து செய்யுங்கள்’ -சிபிஎஸ்இ அமைப்புக்கு 8 பக்க புகார் கடிதம்!