தஞ்சை மேட்டு எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான குளம் அந்த பகுதியில் உள்ளது. இந்த குளம் அந்த பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வந்ததுடன், ஆதாம் கால்வாய் பாசன வாய்க்காலின் முதல் குளமாக திகழ்கிறது.தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். 1803ஆம் ஆண்டில் இரண்டாம் சரபோஜி மன்னர் இக்கோயிலில் திருப்பணிகளைச் செய்துள்ளார். இக்கோயிலின் மூலவராக எல்லையம்மன் உள்ளார். ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது மூலவர் சன்னதி உள்ளது. முன்பாக பலி பீடம் உள்ளது. மூலவர் சன்னதியில் எல்லையம்மன் என்கிற ரேணுகாதேவி உள்ளார். சன்னதியின் வலப்புறம் விநாயகர் உள்ளார். முன் மண்டபத்தில் ஓவியங்கள் காணப்படுகின்றன. திருச்சுற்றில் தஞ்சன், மாதங்கி, ஸ்ரீதாரங்கன் சன்னதி உள்ளது. அடுத்து வரிசையாக நாகர்கள் காணப்படுகின்றனர். தொடர்ந்து காடாரேவ் மாதா, பூரணை புஷ்கலையுடன் அய்யனார், நாக கன்னிகைகள் உள்ளார். சண்டிகேஸ்வரி சன்னதி, ஞான பைரவர் சன்னதியும் காணப்படுகின்றன. மிகவும் சக்திவாய்ந்த எல்லையம்மனை அப்பகுதியை சேர்ந்தவர்கள், குலதெய்வமாகவும், வீட்டு காவல் தெய்வமாகவும் வணங்கி வருகின்றனர்.




இத்தகைய சிறப்பு பெற்ற தஞ்சை எல்லயம்மன் கோயிலில், மாநகராட்சி நிர்வாகத்தின் குளம் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான குளம் அந்த பகுதியில் உள்ளது. இந்த குளம் அந்த பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வந்ததுடன், ஆதாம் கால்வாய் பாசன வாய்க்காலின் முதல் குளமாக திகழ்கிறது.சுமார் 75 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் கண்டு கொள்ளாததால், பொது மக்கள், குளத்தை துார்த்து வீடுகளை கட்டிகொண்டு வசித்து வந்தனர்.


இந்த குளம் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் வீடுகள் கட்டப்பட்டன. இந்த ஆக்கிரமிப்புகள் 75 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் வீடுகளை சுற்றி வேலியும் அமைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மேட்டு எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்து வந்தனர். இந்நிலையில் அந்த பகுதி பொதுமக்கள் இது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, கோவில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மாநகராட்சிக்கு, கடந்த 24-2-2021ஆம் தேதி உத்தரவிட்டது.


மேலும் கோர்ட்டு உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறும் அந்த பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியவர்களுக்கு அகற்றுமாறு நோட்டீசும் அனுப்பியது.இதனை தொடர்ந்து,மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், இளநிலை பொறியாளர் கண்ணதாசன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பொக்லின் எந்திரம் மூலம் கோவில் குளத்தில் கட்டப்பட்டு இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதையடுத்து அந்த பகுதியில் போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.




இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில்,கோயில் குளம் என்று தெரிந்தும், வீட்டு வரி, மின்சாரம் குடிநீர் இணைப்பு,  அதற்கு வரி என அனைத்தும் செலுத்தி வந்துள்ளனர். அவர்களுக்கு குளம் என்று தெரிந்து வரி வசூலித்த அலுவலர்களையும், அதிகாரிகளையும் விசாரணை செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏழை எளிய பொது மக்களிடம் பணத்தை பெற்று கொண்டு, இது போன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் வேதனையான செயலாகும். கடந்த ஆட்சி காலங்களில் குளத்தை துார் வார வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டனர். தற்போதுள்ள மாநகராட்சி அதிகாரிகள், அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்கு, எங்கள் பகுதி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.