மயிலாடுதுறை நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் விடுதியில் 20 -க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களிடம் தன்பாலின ஈர்ப்புக்கு அழைத்த குற்றச்சாட்டில்  பள்ளியின் ஆசிரியரும், விடுதிக் காப்பாளருமான சீனிவாசன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சமூக ஆர்வலரான வழக்கறிஞர் ஷங்கமித்திரன்  மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா நடத்திய மக்கள் குறைதீர்ப்பு முகாமில் கலந்துகொண்டு  மனு ஒன்றை அளித்தார்.  




அந்த மனுவில் பாலியல் குற்றச் சாட்டிற்கு ஆளான பள்ளியில் அரசு அனுமதி இல்லாமல் இயங்கிய மாணவர் விடுதியை உடனடியாக மூடி மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யவேண்டும்,  உயர்நீதிமன்ற உத்தரவின்படி போக்சோ குற்றச்சாட்டிற்கு ஆளான பள்ளி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவேண்டும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இதுபோன்ற குற்றங்கள் நிகழாவண்ணம் இருக்க உடனடியாக ஒவ்வொரு பள்ளியிலும் சுதந்திரத்துடன் கூடிய புகார்பெட்டி ஒன்றை வைக்கவேண்டும் என்றும், அதை திறந்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை பள்ளி நிர்வாகத்திடம் அளிக்காமல், உயரதிகாரிகளை கொண்டு கண்காணித்து மாவட்ட ஆட்சியர், காவல்கண்காணிப்பாளர் போன்றவர்கள் நேரடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.




மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த முகாமில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.


கிராம ஊராட்சிகள் அளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை வசதி, இடுகாடு வசதி, ஆரம்ப சுகாதார நிலையம், குளங்களுக்கு தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தமிழக அரசின் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஆண்டிற்கு 12 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு கிராமத்திற்கும் தலா நாற்பது லட்ச ரூபாய் செலவில் ஊராட்சி ஒன்றியம் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 




இதற்காக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட திட்ட அலுவலர், ஊராட்சி ஒன்றிய அலுவலர் வளர்ச்சிப் பணிகள் ஆணையர், சுகாதாரத்துறை வேளாண் துறை உள்ளிட்ட 16 துறை அலுவலர்கள் கிராம மக்களுடன் கலந்துரையாடி பணிகளை தேர்வு செய்வது வழக்கம். இதற்காக நேற்று மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்லியநல்லூர் ஊராட்சியில் இதற்கான முகாம் நடைபெற்றது. 


PM MODI: அதிகரிக்கும் கொரோனா... பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை..! முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா..?




மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையர், வேளாண் துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் முகாமில் பங்கேற்றனர். இதில் நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு சட்ட‌மன்ற உறுப்பினரிடம் குடிநீர் வசதி, சாலை வசதி, மின் இணைப்பு வசதி ஏற்படுத்திதர வேண்டி கிராம‌ மக்கள் 50 க்கும்‌ மேற்பட்டோர்‌ மனுக்களை அளித்தனர்.