கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டத்தை சேர்ந்தவர் எம்.ஆர்.கணேஷ். இவர் பாஜகவின் முன்னாள் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட வர்த்தக பிரிவு தலைவராக இருந்தார். இவரது சகோதரர் எம்.ஆர்.சுவாமிநாதன். இவர்கள் தங்களது வீட்டிலேயே நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஓராண்டில் இரட்டிப்பாக தொகை வழங்கப்படும் என கூறியதால் கும்பகோணத்தில் உள்ள தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பல கோடி ரூபாயை முதலீடு செய்தனர். ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக யாருக்கும் முதிர்வு தொகை கொடுக்கவில்லை.
இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த ஜபருல்லா-பைரோஜ்பானு தம்பதியினர் தங்களுக்கு முதலீடு செய்த 15 கோடியை தராமல் ஏமாற்றியதாக காவல்துறையில் புகார் செய்தனர். இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நிதி நிறுவனத்தின் பொது மேலாளர் ஸ்ரீகாந்த் (56) என்பவரை கடந்த செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் நிதி நிறுவன அதிபர்களான தலைமறைவாகியுள்ள எம்.ஆர்.கணேஷ் சகோதர்களை தேடி வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி நேற்று முன்தினம் இரவு கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் செல்வதற்காக பேருந்தில் செல்ல முயன்ற, நிதி நிறுவனத்தில் பணியாற்றிய கணக்காளர்களான கும்பகோணம் டபீர் கீழத்தெருவைச் சேர்ந்த மீரா (30), அவரது தம்பி ஸ்ரீதர் (29) ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி இரவு ஹெலிகாப்டர் சகோதர்களின் ஒருவரான எம்.ஆர்.கணேசனனின் மனைவி அகிலா (33) மற்றும் புரோகிதர் கும்பகோணத்தை சேர்ந்த புரோகிரத் வெங்கடேசன் (58) இருவரை கைது செய்து, கோர்ட்டில் ஒப்படைத்தனர். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி, புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டி அருகில், ஹெலிகாப்டர் சகோதரர்களான எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் ஆகிய இருவரையும், தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையிலான போலீசார், வழக்கறிஞர் ஸ்ரீதர் என்பவரது பண்ணை வீட்டில், 18 பெட்டிகள், ஒரு செல்போன், ஒரு கார் ஆகியவற்றுடன் ஹெலிகாப்டர் சகோதரர்களான எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
பின்னர் இருவரையும் கும்பகோணம் கோர்ட்டுக்கு அழைத்து வந்து நீதிபதி தரணிதர் வீட்டில், நள்ளிரவு 2 மணி அளவில் ஆஜர்படுத்தினர். தற்போது புதுக்கோட்டை சிறையில் உள்ளனர். இந்நிலையில், ஹெலிகாப்டர் சகோதரர்கள் கும்பகோணத்தை அடுத்த துறையூர் கிராமத்தில் இரண்டு மாட்டு பண்ணைகளை வைத்து வளர்த்து வந்தனர். ஆனால் சகோதரர்கள் இருவரும், பண்ணையில் வேலை பார்த்தவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் சென்றதால், மாடுகளுக்கு உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
பண்ணையிலுள்ள கன்றுகுட்டிகள், மாடுகள் பசியால் உணவின்றி தவித்ததால், மாவட்ட நிர்வாகம் சார்பில், தனியார் மற்றும் அரசு துறையை சேர்ந்தவர்களிடம் நிதியுதவி பெற்று இது நாள் வரை மாடுகளுக்கு உணவு வழங்கி வந்தனர். தற்போது நிதியுதவி அளிக்க யாரும் முன் வராததால், மாவட்ட நிர்வாகம் சகோதரர்கள் பண்ணையிலிருந்து கன்றுகுட்டிகள் உள்பட 154 மாடுகளை 10 லாரி மூலம், விழுப்புரம் மாவட்த்திலுள்ள ஸ்ரீகாஞ்சி காமகோடி மகா பெரியவர் கோசாலைக்கு, கும்பகோணம் கோட்டாச்சியர் சுகந்தி தலைமையில் வருவாய்த்துறையினர், வனத்துறையினர், பணியாளர்கள் அனுப்பி வைத்தனர்.