தஞ்சாவூர்: தீண்டாமை போன்றவை நமது சமூகத்தில் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. தீண்டாமை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது. தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் செல்லக்கூடாது என வெளிவரும் செய்திகளை நான் இங்கு தான் கேள்விப்படுகிறேன் என்று தமிழக கவர்னர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். 

 

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே ஒழுகச்சேரி கிராமத்தில் தமிழ் சேவா சங்கம் சார்பில் சிவகுலத்தார் கலை பண்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பேசுகையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கோவில்கள் என்பது நம் கலாச்சாரத்தின் அடையாளமாக திகழ்கிறது. ஊர் உருவாக்குவதற்கு முன் கோவிலைதான் உருவாக்குகிறோம். அதன் பின்னர்தான் வீடு கட்டுகிறோம். கோவில் என்பது வெறும் வழிபாட்டு தலமாக இல்லமாமல், நம்முடைய கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தது.

 

இந்த பாரத நாடு மன்னர்களால் உருவாக்கப்படவில்லை. ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவாக்கப்பட்ட பெருமை மிகு நாடு. தர்மத்தின் அடிப்படையில் அறம் சார்ந்த நாடு உருவாக்கப்பட்டுள்ளது.   கன்னியாகுமரியில் இருந்து இமயமலை வரை இந்த நாடு ஒன்றுபட்ட குடும்பமாகத் திகழ்கிறது.

 

நாட்டின் வலிமை  தர்மத்திலிருந்து உருவானது. இந்து தர்மத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த நாட்டில் யாரும் புறக்கணிக்கப்பட்டவர்கள் கிடையாது.  இதை பொறுத்தே இந்தியா கட்டமைக்க பட்டுள்ளது. பாரதி கூறியது போல் செப்பு மொழி பதினெட்டுடையாள் சிந்தனை ஒன்றுடையாள் என்ற தர்மத்தின் அடிப்படையில் ஒன்றுபட்டுள்ளது. 

 

நாட்டிற்கு படையெடுத்து வந்த ஆங்கிலேயர் உள்பட பலராலும் நம்முடைய தர்மத்தை சீரழிக்க நினைத்தாலும், யாராலும் வெற்றி பெற முடியவில்லை. அதற்கு காரணம் பாரதிய தர்மம் நம்முடைய இதயத்தில் ஒன்றி இருப்பதே ஆகும்.  ஆனால் பிரிட்டிஷ்காரர்கள் நம்முடைய ஆன்மிகம், மொழி, பண்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்திச் சென்றனர். அதனால்தான் மகாத்மா காந்தி,அரசியலில் விடுதலை பெற்றிருந்தாலும், நம் கலாச்சாரம், பண்பாட்டை எப்போது கலாசாரத்தில் எப்போ விடுதலை பெறுகிறோம அன்றுதான் உண்மையான விடுதலை என்றார்.

 

சுதந்திரத்துக்கு பிறகு சாலை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளில் முனைப்பு காட்டினோம். ஆனால் தொடர்ந்து கலாசார மறுமலர்ச்சிக்கு எந்தவித முன்னெடுப்பும் செய்யப்படவில்லை. அறிவியல் தொழில், பொருளாதாரம்,, ராணுவம வளர்ச்சி அடைந்தாலும் கலாச்சாரம். வளர்ச்சி இல்லாத நாடு  உண்மையான வளர்ச்சியாக இருக்காது. இப்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசால் நம் நாடு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் மூலம் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக நம் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. 

 

உலகத்தின் வல்லரசு நாடுகள் இந்தியாவின் தலைமையில் ஒன்று கூடின. இது உலக நாடுகளில் இந்தியாவுக்கு கிடைத்த பெருமை.  இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டபோது, மதசார்பின்மையை சேர்க்க வேண்டும் என வாதிட்டார். ஆனால் உச்சநோக்கினால் இந்த வார்த்தையை ஆங்கிலேயர்களால் இந்தியாவிற்கு வந்தது. இரு வேறு நாடுகளில் ஏற்பட்ட சண்டையை நிறுத்துவதற்கு உருவாக்கப்பட்ட வார்த்தை தான் மத சார்பின்மை. 

இந்தியாவில் மதத்தின் பெயரில் வேறுபாடு இல்லை அனைவரும் சமம். எந்த ஒரு தீண்டாமையும் எந்த ஒரு பாகுபாடும் கிடையாது. நாம் அனைவரும் ஒரே குடும்பம். இந்து தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசுபவர்கள் உள்ளார்ந்த நோக்கம் இருக்கிறது.  தீண்டாமை போன்றவை நமது சமூகத்தில் நிகழ்ந்து கொண்டுநிருகிறது. தீண்டாமை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது. தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்கு செல்லக்கூடாது எனவும் வெளிவரும் செய்திகளை நான் இங்கு தான் கேள்விப்படுகிறேன். அண்டை மாநிலங்களில் நடப்பதில்லை. இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் சாதி குறித்த கை அணிகலன்களை அணிவதை நான் பார்த்ததில்லை. இதன் மூலமாகவே சமூக அநீதியை உருவாக்குவதற்காக சாதிய அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன.

 

தாழ்த்தப்பட்ட மக்களின் வீட்டில் சமைத்த உணவை சாப்பிட மாட்டேன் என சொல்லும் செய்தியையும் இந்த மாநிலத்தில் தான் கேள்விப்பட்டுள்ளேன். இந்தியா நிலவுக்கு சென்றிருக்கிறது இன்றைக்கு சூரியனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பலதரப்பட்ட முறையில் வளர்ந்து கொண்டிருக்கும் நாட்டில் தீண்டாமை ஏற்புடையதல்ல. அனைவரும் ஒரே நம்பிக்கை ஒரே குடும்பமாக வாழ வேண்டியது கட்டாயம். அனைத்து சமுதாயத்தின் சேர்ந்த சகோதர சகோதரிகளை சமமாக நடத்துவதோடு மரியாதை கொடுப்பது கடமையாகும். அவர்களின் பொருளாதார வளர்ச்சி சமூக அந்தஸ்து ஆகியவை அங்கீகாரம் அளிப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். இவ்வாறு அவர் கூறினார்.