தஞ்சாவூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தஞ்சையில் பூக்களின் விலை அதிகரித்தது. இருப்பினும் பொதுமக்கள் பூக்களை அதிகளவில் வாங்கியும் சென்றனர். 


பொதுவாக முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும். பூக்களின் தேவை அதிகம் என்பதால் அவற்றின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. தஞ்சாவூர்: தஞ்சை விளார் சாலையில் பூச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஓசூர், நிலக்கோட்டை, மதுரை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக லாரிகளில் கொண்டு வரப்படும்.


இதே போல் இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்வர். வியாபாரிகள் மொத்தமாகவும் பூக்கள் வாங்கி செல்வர். முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும். மேலும் வரத்து குறைவு, விளைச்சல் பாதிப்பு, மழையால் பாதிப்பு போன்றவை இருந்தாலும் விலை அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


அந்த வகையில் நேற்று ஆவணி மாத கடைசி முகூர்த்த நாள் என்பதாலும்,,. இன்று விநாயகர் சதுர்த்தி என்பதாலும் பூக்களின் தேவை அதிகம் இருந்தது. இதனால் கடந்த 2 நாட்களாகவே பூக்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் நேற்று மல்லிகை கிலோ ரூ.700-க்கு விற்பனையானது. ஆனால் இன்று கிலோ ரூ.1250- வரை விற்பனை செய்யப்படுகிறது. முல்லை கிலோ ரூ.1000, ஆப்பிள் ரோஸ் ரூ .250, சம்பங்கி ரூ.250க்கும் விற்பனை செய்யப்பட்டன. இவற்றின் விலையும் நேற்றைய விலையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் பொதுமக்கள் விலையை பற்றி கவலைப்படாமல் பூக்களை வாங்கி சென்றனர்.




இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், நேற்று ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள். மேலும் இன்று விநாயகர் சதுர்த்தி. இதனால் பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகம் இருந்தது. இதனால் அவற்றின் விலையும் அதிகரித்துள்ளன. இருந்தாலும் பூக்களின் வரத்தும் அதிகமாக உள்ளது என்றனர்.


விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. 


இவ்விழா மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப் பட்டிருக்கிறது. அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பின்னர் பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது. பிறகு அது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது. இதையும் படியுங்கள்: சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம கோவில் மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


அதன் பிறகு சுதந்திர போராட்டக் காலத்தில் தான், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார். அதன் பிறகு தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்தினர்.