தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடக்கிறதா என்பது குறித்து திடீர் ஆய்வை உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., புக்ய சினேகபிரியா மேற்கொண்டார்.
தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அருண் பொறுப்பேற்றதிலிருந்து பொது வினியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் போன்றவற்றில் ஈடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் அலுவலர்கள், விவசாயிகளிடம் போதுமான ஆவணங்களை பெற்றுக்கொண்டு மட்டும் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளிடம் பணம் லஞ்சமாக பெறக்கூடாது. வியாபாரிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது என்று கூடுதல் டி.ஜி.பி. அருண் உத்தரவிட்டுள்ளார்.
இதன்பேரில் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு துறை, திருச்சி மண்டல எஸ்.பி., (பொ) புக்ய சினேகபிரியா தஞ்சையை அருகே வல்லத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கொள்முதல் நிலையத்தில் முறைகேடுகள் நடைபெறுகிறதா? எனவும் ஆய்வு செய்தார்.
அங்கு, விவசாயிகளிடம் இருந்து முறையாக கொள்முதல் செய்யப்படுகிறதா? வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா? என்பது குறித்து கேட்டறிந்தார். கொள்முதல் நிலைய ஊழியர்களை அழைத்து, விவசாயகளிடம் இருந்து எந்த புகாருக்கும் இடமளிக்காமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஆய்வின் போது தஞ்சை சரக டிஎஸ்.பி. சரவணன், இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா, குறுவை அறுவடை நடந்து வருகிறது. இதில் அதிகளவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி நடந்து வருகிறது. தற்போது விவசாயிகள் அறுவடை செய்யும் நெல் பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் பிடிக்கப்பட்டு விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளுக்கு ரூ.40 வரை பணம் லஞ்சமாக வாங்கப்படுகிறது என்று ஆங்காங்கே புகார்கள் எழுந்தன. இதை தடுக்கும் விதத்தில் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் அவ்வபோது உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகளை காத்திருக்க வைக்கக்கூடாது. அவர்களிடம் இருந்து பணம் வாங்கக்கூடாது என்று நெல் கொள்முதல் நிலைய அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இது விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தஞ்சை அருகே வல்லம் நெல் கொள்முதல் நிலையத்தில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., திடீர் ஆய்வு
என்.நாகராஜன்
Updated at:
13 Mar 2023 01:26 PM (IST)
விவசாயிகளிடம் இருந்து முறையாக கொள்முதல் செய்யப்படுகிறதா? வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா? என்பது குறித்து கேட்டறிந்தார்.
கொள்முதல் நிலையத்தில் உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.
NEXT
PREV
Published at:
13 Mar 2023 01:26 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -