தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பயன்பாட்டிற்காக புதிய 3 வகுப்பறைகள் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் அரசு மேல்நிலை பள்ளியில் 19 லட்சம் மதிப்பீட்டில் புதிய 3 வகுப்பறைகள், புதிய கழிவறைகள் மற்றும் 50 மேஜை பெஞ்ச்கள் வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது. கும்பகோணம் அருகே சுவாமிமலையில் அரசு மேல்நிலை பள்ளியில் 962 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மாணவர்கள் அமர்ந்து படிக்க போதுமான இட வசதியில்லாத நிலையால் சிரமப்பட்டு வந்தனர். மழைக்காலங்களில் மாணவர்கள் வெளியில் அமர்ந்து படிக்க முடியா நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் கல்வி கற்பதில் சிரமம் உருவானது. மேல்நிலைப்பள்ளி என்பதால் மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என்ற நிலையால் பள்ளி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட வளர்ச்சி நிதியிலிருந்து ரூபாய் 2.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய 3 வகுப்பறைகளை கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து இப்பள்ளிக்கு வகுப்பறை கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா இந்த பள்ளி வகுப்பறை கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
சுவாமிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா
என்.நாகராஜன் | 13 Mar 2023 11:55 AM (IST)
கும்பகோணம் பரஸ்பர நிதி லிமிடெட் சார்பில் 7.50 லட்சம் மதிப்பில் 50 மேஜை பெஞ்ச்களை மாநிலங்களவை உறுப்பினரும், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம் வழங்கினார்.
சுவாமிமலை பள்ளியில் நடந்த முப்பெரும் விழா
Published at: 13 Mar 2023 11:55 AM (IST)