மாவட்டம் சீர்காழி அடுத்த திருவந்தி கட்டளைபுரம் தெருவில் சேர்ந்தவர்  கிருஷ்ணன். இவருக்கு முருகேசன் என்ற மகனும், முத்துலட்சுமி என்ற 45 வயது மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் கிருஷ்ணனுடைய சொத்தை இரு பாகங்களாக பிரித்து முத்துலட்சுமி வழங்காமல், முருகேசன் முழு சொத்தையும், தனது பெயரிலும் தனது மகள் பெயரிலும் மாற்றம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.




இதனை அறிந்த முத்துலட்சுமி சென்று முருகேசன் இது தொடர்பாக கேட்டுள்ளார். அப்போது முருகேசனின் மருகன் தாமோதரன்  முத்துலட்சுமியை கொலைசெய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து இன்று ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் இருதரப்பு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. பேச்சு வார்த்தையில் முத்துலட்சுமிக்கு சாதகமான இல்லாத நிலையில் பாதியில் முத்துலட்சுமி கூட்டத்தை புறக்கணித்துள்ளார். அப்போது முத்துலட்சுமியின் அண்ணன் மற்றும் அவரது உறவினர்கள் முத்துலட்சுமி  மகனையும், அவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


Virat Kohli Century:1204 நாட்கள் தவம்… 3 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்டில் சதம் விளாசினார் விராட்..! கோலியை கொண்டாடும் ரசிகர்கள்..!




இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி தன்னையும் தன் மகனையும் தாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீடீரென தனது மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட அங்கு இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, அவரிடம் இருந்து மண்ணெண்ணெயை பிடிங்கி அவர்மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். தொடர்ந்து இது தொடர்பாக அவர்களை சீர்காழி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Madhuri Dixit Mother Death: பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் தாயார் மறைவு - ரசிகர்கள், பிரபலங்கள் அஞ்சலி


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண