தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், கார் கொள்ளையனை துரத்தி பிடித்த போலீசை, உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். மதுரை  எல்லிஸ் நகரை சேர்ந்த வேலுப்பாண்டி (23), அவரது நண்பர் வெங்கடேஷ் இருவரும், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில், கடந்த 13 ஆம் தேதி  கார் ஒன்றை, மதுரைக்கு செல்ல வேண்டும் என வாடகைக்கு எடுத்துள்ளனர். காரில்  ஏறிய இருவரும், செய்யாறை தாண்டி சிறிது துாரத்தில், டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த பணம் மற்றும் வெள்ளி செயினை பறித்து கொண்டு, காரில் இருந்து டிரைவரை

  அடித்து உதைத்து, கீழே தள்ளிவிட்டு, அங்கிருந்து காருடன் தப்பினர். 




 


இது குறித்து கார் டிரைவர், அப்பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வயர்லெஸ் மூலம் தமிழ்நாடு முழுவதும், காரை பிடிக்க காவல் துறையினருக்கு தகவல் கொடுத்து உஷார்படுத்தப்பட்டனர். அப்போது, பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., செங்கமலக்கண்ணன் டிரைவராக பணியாற்றும்,  முதல்நிலை காவலரான பீரதாப் (30), மற்றும் காவல் நிலையத்திலுள்ள அனைத்து போலீசாரும், வயர்லெஸ்சில் கூறிய கார் நம்பரை குறித்து வைத்துக்கொண்டார். இந்நிலையில்  மதியம் 12:45 மணிக்கு, பிரதாப், வீட்டிற்கு தேவையான மாத்திரைகள் வாங்குவதற்காக  மெடிக்கல் ஷாப்பிற்கு சென்றார்.




போலீசார் பிரதாப், மாத்திரைகளை, கடைகாரரிடம் கூறி விட்டு, சாலையில் நோட்ட மிட்டவாறு நின்றிருந்தார். அப்போது வயர்லெஸ்சில் கூறிய, கார் அந்த பகுதியாக வழியாக சென்றது. இதனையறிந்த போலீசார் பிரதாப், தனது இரண்டு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு,  காரை விரட்டி சென்று தடுத்து நிறுத்தி முயன்றார். ஆனால், போலீசாரை  கண்ட வேலுப்பாண்டி, வெங்கடேஷ் இருவரும், காரை அங்கேயே நிறுத்தி விட்டு, காரை விட்டு விட்டு, அங்கிருந்து தப்பி ஓடினர்.  பின்னர், போலீசார் பிரதாப், தனது பைக்கை நிறுத்தி விட்டு, அவர்களை  விடாமல் துரத்தி பிடிக்க ஒடினார். இதில் நிலைதடுமாறி, பிரதாப் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரின் இடது கையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்தும் வலியை பொருட்படுத்தாமல், போலீசார் பிரதாப், தப்பியோடும் வேலுப்பாண்டியை மடக்கி பிடித்தார். அதற்குள் மற்றொருவர் வெங்கடேஷ் தப்பியோடி விட்டார்.




பின்னர், அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரித்து, அவரிடம் இருந்த மூன்று மொபைல் போன்கள், 8 ஆயிரம் பணம், ஒரு வெள்ளி கை சங்கிலி, அரிவாள், கத்தி பறிமுதல் செய்து மற்றும் காரை மீட்டனர். காயமடைந்த பிரதாப்பிற்கு  பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தப்பியோடி வெங்கடேஷை போலீசார் தேடி வருகின்றனர். தனக்கு அடிபட்டும்,உயிரை மதிக்காமல், விரட்டி சென்று காரை கடத்தியவரை பிடித்த போலீசார் பிரதாப்பின் வீரசெயலை போலீஸ் எஸ்.பி ரவளிப்ரியா, டிஎஸ்பி செங்கமல கண்ணன் உள்ளிட்ட சக போலீசார் பாராட்டினர்.