தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.




TN Rains: தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு- எந்த மாவட்டங்கள் தெரியுமா..!


இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக மாலை துவங்கி நள்ளிரவு வரை கனமழை பெய்து வருகிறது. நேற்று காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மயிலாடுதுறை, மணல்மேடு,  செம்பனார்கோயில், சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோயில், குத்தாலம், தரங்கம்பாடி,  திருமுல்லைவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மணல்மேடு பகுதியில் 7 சென்டிமீட்டர் மழையும், மயிலாடுதுறையில் 4.5 சென்டிமீட்டர், தரங்கம்பாடியில் 4 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. 




Engineering Counselling: பொறியியல் சிறப்புக் கலந்தாய்வு: யார், யாருக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு?- முழு விவரம்


இந்த மழை காரணமாக வயல்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த ஆண்டு முன்பு எப்போதும் இல்லாத நிகழ்வாக மேட்டூர் அணையில் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட்ட காரணத்தால் வழக்கமாக குறுவை சாகுபடி செய்யும்  பரப்பளவை விட  கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. சுமார் 92 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற் பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. ஒரு சில இடங்களில் முற்றிய நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக பெய்த கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி உள்ளன. இதன் காரணமாக நெல் தரம் குறைவதுடன், அறுவடை இயந்திரத்தின் மூலம் அறுவடை செய்யும் பொழுது நெல்மணிகள் தரையில் சிதறி விளைச்சல் குறையும் என்றும், இயந்திரத்தின் வாடகை அதிகரிக்கும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.




Crime: "ஏரியாவில் யார் பெரிய ரவுடி" - பழிக்கு பழி அரங்கேறிய இரட்டை கொலை.. முழு பின்னணி...?


ஒரு சில பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்னும் திறக்காததால் அறுவடை செய்த நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து பாழாகி வருகின்றது. மேலும், இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீட்டு திட்டம் தமிழக அரசு அறிவிக்காத நிலையில் நிவாரணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு இருபதாயிரம் ரூபாய் செலவு செய்துள்ள நிலையில் செலவு செய்த தொகை கூட கையில் கிடைக்காது என்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.