மயிலாடுதுறை மாவட்டம் ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தில் டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் அதேபோன்று மயிலாடுதுறை நகரத்திலும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மருந்து இடு பொருள் வேண்டாம் என்றும், சம்பா சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்க வேண்டும், சம்பா அறுவடையின்போது அறுவை இயந்திரத்திற்கு தமிழ்நாடு அரசு டீசலை மானியத்தில் தர நடவடிக்கை எடுக்க வேண்டும், கோடைகாலத்தில் பாசன வாய்க்கால்கள் மற்றும் வாய்க்கள்களை வெட்டும் போதும், அரசு அதற்கான டெண்டர் விடும் போதும் இரண்டு விவசாயிகளை நியமித்து முறைகேடு ஏற்படாமல் கண்காணிக்க நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - DNA பரிசோதனையில் உண்மை அம்பலம்
மேலும் டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் செந்தில் குமார் கூறுகையில், இந்த ஆண்டு பெய்த பெரும் கனமழையால் மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் பெரும் பாதிப்பை சந்தித்தது, குறிப்பாக விவசாயிகள் சாகுபடி செய்திருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்கள் முற்றிலும் மழை வெள்ள நீரில் மூழ்கி பாழாகிப் போனது.
Anushka Property | அடேங்கப்பா! அனுஷ்கா ஷெட்டியின் சொத்து மதிப்பு தெரியுமா?
இதற்கு முக்கிய காரணம் வடிகால்களை முறையாக தூர் வாராமல் அவற்றில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்றும், குறிப்பாக பிரதான வாய்க்கால்கள் ஆன ஏ, பி வாய்க்கால்களை மட்டும் தூர்வாரி விட்டு கிளை வாய்க்கால்களையும், வடிகால் வாய்க்கால்களை தூர்வாராமல் விட்டு விட்டனர். ஏன் ஒரு சில வாய்க்கால்களையும் முறையாக ஆக தூர் வாராமல் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளனர் என்றும், இதனை வரும் காலங்களில் தடுக்க வேண்டுமென்றால் தமிழ்நாடுஅரசு வாய்க்கால்களை தூர்வார அனைத்து பணிகளிலும் விவசாயிகளை இணைத்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
ABP நாடு செய்திகளை Goole News - ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்