மயிலாடுதுறையில் மாவட்ட திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தில் திமுக எம்எல்ஏக்கள்  உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.


இந்தியாவில் பன்னிரண்டாம் வகுப்பு  பொது தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் முன்பு மருத்துவக் கல்லூரிக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இந்நிலையில் மருத்துவ சேர்க்கைக்கு  புதிதாக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நீட் நுழைவுத் தேர்வு மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீட் நுழைவுத் தேர்வு அச்சம் காரணமாகவும், தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் என பல மாணவர்கள் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டனர். ஏழை எளிய மாணவர்களின் கனவை நீட் தேர்வு முறை சிதைக்கும் வகையில் உள்ளதாக தமிழக அரசு அரசு எதிர்ப்பு தெரிவித்து நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.




கடந்த 2021 -ஆம் ஆண்டு  நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற  நீதிபதி  ஏ.கே ராஜன் தலைமையில் தமிழக அரசால் ஆய்வு குழு அமைக்கப்பட்டது. அதில் நீட் தேர்வுக்கு பின் மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மருத்துவக் கல்வியில் சேரும் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தனியார் மையங்களில் பயிற்சிக்காக 4.5 லட்சம் ரூபாய் வரை மாணவர்கள் செலவழிக்க வேண்டியுள்ளதால் நீட் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம் என்று அந்த குழு பரிந்துரைத்தது.


Minister Udhayanidhi: செங்கலை தொடர்ந்து முட்டையை கையில் எடுத்த உதயநிதி - நீட் விவகாரத்தில் மீண்டும் சம்பவம்!




அதன் அடிப்படையில் நீட் தேர்வுக்கு விளக்கு அளிக்கும் மசோதா 2021 செப்டம்பர் 13 -ஆம் தேதி சட்டமன்றத்தில் தமிழக அரசால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதனை தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு தமிழக ஆளுநர் நீட் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.  நீட்விலக்கு மசோதாவின் முக்கியத்துவத்தை குடியரசு தலைவருக்கு உணர்த்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நீட்விலக்கு நம் இலக்கு என்ற பெயரில் திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் இன்று தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.


India Canada Row: தூதரக விவகாரத்தில் கனடாவிற்கு கெடு விதித்த இந்தியா..! வியட்நாம் ஒப்பந்தத்தை மீறியதா? - உண்மை என்ன?




50 நாட்களில் அம்பது லட்சம் கையெழுத்திட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பும் வகையில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் மாவட்ட திமுக சார்பில் நீட் விலக்கு கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் தலைமையிலான நேரடி காணொளி காட்சியை  பொதுமக்கள் பார்க்கும் வண்ணம் பிரம்மாண்ட எல்இடி திறையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. 


Thevar Jayanthi, 2023 : ‘தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் செல்லும் எடப்பாடி பழனிசாமி’ எதிர்ப்பு தெரிவிக்க இயக்கங்கள் திட்டம்..?


நீட் தேர்வில் விலக்கு அளிக்ககோரி  குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி கையெழுத்திட்டு திமுகவினர் மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் 500 -க்கும் மேற்பட்டோர் நீட்விலக்கு பெட்டியில் கடிதத்தை போட்டனர். இதுபோன்று மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் நீட்விலக்கு கோரி குடியரசு தலைவருக்கு திமுக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது.