சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வாரத்தில் திங்கள் கிழமை ஒருநாள் அரசு அதிகாரிகள் வாகனங்களை பயன்படுத்தாமல் சைக்கிளில், நடந்து அல்லது பொது பேருந்தில் அலுவலகம் வரவேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தி அலுவலகம் வருதல், சைக்கிளில் அலுவலகம் வருதல் என பல வழிகளில் பயணங்கள் மேற்கொண்டு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.




அன்னபூரணி மீது பாயும் வழக்கு: செங்கல்பட்டு நிகழ்ச்சிக்கு தடை... தேடும் ஈரோடு போலீஸ்... தொடங்கியதும் முடியும் சாம்ராஜ்யம்!


அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்  இரா.லலிதா தனது வீட்டில் இருந்து நடந்து பேருந்து நிறுத்தம் சென்று அங்கு இருந்து அரசு பேருந்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு வருகை புரிந்தார். சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க கீழ நாஞ்சில்நாடு பகுதியில் உள்ள ஆட்சியர் முகாம்  அலுவலகத்தில் இருந்து, மாவட்ட ஆட்சியர் லலிதா 3 கிலோ மீட்டர் தூரம் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசுப் பேருந்தில் வந்தடைந்தார். மேலும் அவர் மகளிருக்கான விலையில்லா பேருந்து பயணத்திட்டத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தார்.



 


Personal Finance Tasks: டிசம்பர் 31க்குள் முடிக்க வேண்டிய பணம் சார்ந்த 4 முக்கிய விஷயங்கள்: மறந்துடாதீங்க!


பேருந்து முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்ததால் பேருந்தில் நின்று கொண்டே பயணம் செய்த மாவட்ட ஆட்சியர், கீழவீதி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நடைபயணமாக வந்து சேர்ந்தார். மாவட்ட ஆட்சியரோடு ஆண் அதிகாரிகளும் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்து வந்தடைந்தனர். வாரத்தில் ஒருநாள் இதுபோல் அனைத்து அதிகாரிகளும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று அப்போது மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.




Nalini Released on Parole : ’30 நாட்கள் பரோலில் வெளியே வந்த நளினி’ கண்ணீருடன் வரவேற்ற தாய் பத்மா..!


ஆனால் கொரோனா, ஒமிக்ரான், என வைரஸ் தொற்று பரவுவதை தவிர்க்க முக கவசம் சமூக இடைவெளியை கடுமையாக பின் படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் இந்த வேளையில், அரசு பேருந்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வழியின்றி கூட்டம் வழிந்து நிரம்ப மக்கள் கூட்டத்தில்  மாவட்ட ஆட்சியர் அரசு பேருந்தில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.


Pongal 2022: மாட்டுபொங்கல் விழா- நெகிழி மாலைகளுக்கு தடை விதிக்க நெட்டி மாலை தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்