மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் ரயில்வே கேட் அருகில் மணல்மேடு சாலையில் குடியிருப்பு பகுதியில் தனியார் பட்டாசு கடை இயங்கி வருகிறது. மேலும் அங்கு நாட்டு வெடி தாயார் செய்வதாகவும் அதற்கான கரித்துகள்கள், இரும்பு பைப்புகள், அமோனியா சல்பர், வெடிமருந்து உள்ளிட்ட மூலப் பொருட்கள் ஏராளமாக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலையத்த்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
வைத்தீஸ்வரன் கோயில் காவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளர் லாமேக், சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வெடிக்கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த கடையில் பயங்கர சத்தத்துடன் வெடிக்கக் கூடிய மிக ஆபத்தான 50 கிலோ நாட்டு வெடிகள் மற்றும் அந்த வெடிகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், மூட்டை, மூட்டையாக பட்டாசுகள் ஆகியன பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
Tirunelveli: அபராதம் விதித்த பெண் எஸ்.ஐ.,! திருவிழாவில் சரமாரியாக கத்தியால் தாக்கிய நபர் கைது..
அதனைத் தொடர்ந்து அவற்றை வைத்தீஸ்வரன் கோயில் காவலர்கள் பறிமுதல் செய்து. இது தொடர்பாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் மின் நகரை சேர்ந்த 42 வயதான ரமேஷ் குமார், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஆனந்தன், 40 வயதான பழனிச்சாமி, மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்த 42 வயதான மகேஷ் குமார் ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Musk: தொப்பை எமோஜி.. பில்கேட்ஸை உருவக்கேலி செய்த எலன் மஸ்க்.. கொதிக்கும் இணையவாசிகள்..
மேலும் இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், பட்டாசு கடை நடத்துவதற்கான உரிமத்தை பெற்றுக்கொண்டு, சட்டத்திற்கு புறம்பாக, மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய வெடி மருந்து பொருட்களை தெரியாமல் வைத்து வெடிபொருட்களை தயார் செய்து வந்ததாகவும், குடியிருப்புகள் அமைந்துள்ள இப்பகுதியில் இந்த ஆபத்தான வெடிபொருட்கள் மூலம் தீ விபத்து ஏற்பட்டால் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக வெடி பொருட்கள் தயார் செய்யப்பட்ட நிலையில் அந்த ஆபத்தான வெடி மருந்து பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆய்வுக்கு சென்ற இடத்தில் விவசாயிகளுடன் சேர்ந்து அறுவடை பணியில் ஈடுபட்ட தருமபுரி மாவட்ட ஆட்சியர்