சோஷியல் மீடியாவில் செம ஆக்டீவாக இருப்பவர் தொழிலதிபர் எலன் மஸ்க். குறிப்பாக ட்விட்டரில். உலகத்தில் என்ன நடந்தாலும் அது தொடர்பாக ட்வீட் செய்வதும் அதனை பேசுபொருளாக்குவதுமே அவரது ஸ்டைல். உலகத்தலைவர்கள், பல நிறுவனங்களில் தலைவர்கள் என பலரையும் டேக் செய்து ஜாலியாக அரட்டை அடித்தும், விவாதங்களை செய்தும் டைம் பாஸ் செய்வார். எலன் மஸ்கை
ஆனால் இந்த முறை எலன் மஸ்க் செய்த காரியம் இணையவாசிகளை கொதிப்படையச் செய்துள்ளது. பில்கேட்ஸ் படத்தை தொப்பையோடு இருக்கும் எமோஜியோடு சேர்த்து வைத்து "நீங்கள் ஒரு எலும்பை வேகமாக இழக்க வேண்டியிருந்தால்." என பதிவிட்டுள்ளார். கிண்டலாக இந்த பதிவை எலன் மஸ்க் பதிவிட்டாலும் இது ஒருவித உருவக்கேலி என ட்விட்டர்வாசிகள் கொதித்துள்ளனர். பலரும் எலன் மஸ்குக்கு கண்டனங்களை பதிவிட்டுள்ளனர்.ஒருவரின் உருவத்தை வைத்து கேலி செய்வது வேடிக்கையானது இல்லை என்றும், நீங்களும் பல உருவக்கேலிகளை கடந்து வந்திருப்பீர்கள்தானே எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னதாக, கடந்த மார்ச் 27ஆம் தேதி ஆஸ்கார் விருதுகளில், வில் ஸ்மித் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தை நகைச்சுவை நடிகர் கேலி செய்ததை அடுத்து, வில் ஸ்மித் மேடைக்கு வந்து கிறிஸின் முகத்தில் அறைந்தார். அன்று இரவே சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வில் வென்றார்.ஆனாலும் வில் ஸ்மித்துக்கு பலரும் ஆதரவாக நின்றனர். ஒரு அறை உருவக்கேலிக்கு எதிராக பல குரல்களை எழுப்பியது. பலரும் உருவக்கேலிகள் குறித்து பேசினர். இந்நிலையில் மிக முக்கியமான நிறுவனத்தலைவர் ஒருவர் பல கோடி மக்களால் கவனிக்கப்படும் ஒருவர் உருவக்கேலி செய்து அது தொடர்பான பதிவை ட்விட்டரில் பதிவிட்டது மீண்டும் இணையத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
முன்னதாக, டிவிட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபரான எலன் மஸ்க் வாங்க முன் வந்தார். இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக்குழு தலைவர் பிரெட் டெய்லருக்கு அவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில்,“ ட்விட்டர் நிறுவனத்தின் ஷேர் ஒன்றை 54.20 டாலர் என்ற முறையில் ரொக்கமாக கொடுத்து வாங்க விருப்பம் தெரிவிக்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்