தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த மணியம்பாடி கிராமத்தில், தேர்வு செய்யப்பட்டுள்ள நெல் பயிர் அறுவடை பரிசோதனை திடல்களை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி  நெல் பயிரிடப்பட்டுள்ள விவசாயின் நிலத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பயிர் அறுவடை பரிசோதனை திடல் தேர்வு வயல்கள் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதை கிராம நிர்வாக அலுவலர் பதிவேடு மற்றும் வேளாண்மை துறையினரின் படிவங்களை ஆய்வு செய்தார்., இதில் விவசாயி ஆறுமுகம் என்பவரது விவசாய நிலத்தில் தேர்வு செய்யப்பட்ட பரிசோதனை திடலை ஆய்வு செய்தார்.

 



 

அப்பொழுது திடீரென விவசாயிகளுடன் தீர்ந்து ஆட்சியரும், நெல் அறுவடையில் கலந்து கொண்டு நெற்கதிர்களை அறுவடை செய்தார். தொடர்ந்து ஆய்வுக்கு சென்ற இடத்தில் விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் இணைந்து நெல் அறுவடைசெய்தது அனைத்து விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் ஒரு மாவட்ட ஆட்சித்தலைவர், விவசாயியாகவே மாறி நேரடியாக வயலில் இறங்கி நெல் அறுவடை செய்தது, இதுவே முதன் முறை என்று கூறி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

 



 

அதனைத் தொடர்ந்து, அறுவடை செய்யப்பட்ட  நெல் பயிரில் நெல் மகசூல் விபரத்தினை எடையிட்டு, எடையின் அளவினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் சம்பந்தப்பட்ட பரிசோதனை திடல் விவசாயி ஆறுமுகம், வேளாண்மை இணை இயக்குநர் வசந்தரேகா, வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோகன்தாஸ் செளமியன், பயிர் காப்பீட்டு திட்ட வேளாண்மை அலுவலர் தேவி, மொரப்பூர் வேளாண்மை அலுவலர் ராஜேஸ்வரி, துணை வேளாண்மை அலுவலர் கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







 

அஞ்செட்டி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி குட்டையில் மூழ்கி  உயிரிழப்பு 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி குட்டையில் மூழ்கி  உயிரிழந்தனா். அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அஞ்செட்டி வட்டம், உரிகம் பகுதியைச் சோ்ந்த சிவமாதன் மகன் சிவா (21). தேன்கனிக்கோட்டை அண்ணா நகரைச் சோ்ந்தவா் சின்னராஜ் மகள் அபிநயா (18). இவா்கள் 2 பேருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

 



 

இந்த நிலையில் உரிகம் பகுதியில் நடந்த திருவிழாவிற்காக அபிநயா சென்றிருந்தாா். அப்போது, அங்கு உள்ள தடுப்பணை குட்டையில் அபிநயா குளிக்கச் சென்றாா். நீச்சல் தெரியாததால் அபிநயா தண்ணீரில் மூழ்கினாா். அவரது அலறல் சத்தம் கேட்டு சற்று தொலைவில் இருந்த சிவா ஓடி வந்து காப்பாற்றுவதற்காக குட்டையில் இறங்கினாா். இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அஞ்செட்டி போலீஸாா்  சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.