மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றில் நடுவே அரசு மணல் குவாரி அமைந்துள்ளது. இங்கிருந்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆற்று மணல் அல்லப்பட்டு, பெரம்பூர் என்ற இடத்தில் மொத்தமாக சேகரிக்கப்படுகிறது. அங்கு சேகரிக்கப்படும் ஆற்று மணல், அங்கிருந்து ஆன்லைன் மூலம் விண்ப்பித்து மணல் கேட்பவர்களுக்ங விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




கிண்டல் பண்ணாதீங்க”: காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் தடை.. கொந்தளித்த இயக்குநர்!


இந்நிலையில் ஆற்றின் நடுவே அமைந்துள்ள  அரசு மணல் குவாரியில் மணல் அள்ள பயன்படும் பொக்லைன் இயந்திரத்திற்காக,  தனியார் டீசல் விற்பனை நிலையத்திலிந்து டேங்கர் லாரி மூலம் இன்று 6 ஆயிரம் லிட்டர் டீசல் கொண்டு செல்லப்பட்டது. 6 ஆயிரம் லிட்டர் டீசலுடன் சென்ற டேங்கர் லாரி பூங்குடி கிராமத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி, அருகே இருந்த வயலில் தலைகுப்புற கவிழ்ந்தது.




UPSC CSE Admit Card: 2022 யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு - டவுன்லோடு செய்வது எப்படி?


இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  விபத்தை தொடர்ந்து லாரியை  மீட்க மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, லாரியை மீட்கும் போது டேங்கர் லாரியில் இருந்து வெளியேறிய டீசலை ஆபத்தை உணராமல் அப்பகுதியை சேர்ந்த சிலர் தங்கள் கையில் கிடைத்த பாட்டில்கள், கேன்கள், வாளிகளில் போட்டி போட்டு பிடித்துச் சென்றனர். 




Vijay Video Call: ‛என்ன நண்பா... எப்படி இருக்க...’ வீடியோ காலில் விஜய்... ஹிட்டாகும் ‛தளபதி 66’ செட் பேக்ரவுண்ட்!


தொடர்ந்து  அவர்களை எச்சரித்த போதும், அதனை பொருட்படுத்தாமல் கிடைக்கும் பாட்டில்களில் எல்லாம் டீசலை பிடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சிறு தீப்பொறி பட்டால் கூட வெடித்து பல கிலோமீட்டர் தொலைவிற்கு பெரும் விபத்தை ஏற்படுத்தக்கூடிய மிகவும் ஆபத்தான டீசல் நிறம்பிய டேங்கர் லாரி கவிழ்ந்த தகவலை தீயணைப்பு துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தெரிவிக்காமல்,  மணல் குவாரியை சேர்ந்த பொக்லைன் இயந்திரம் மூலம் எந்த ஒரு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இன்றி மீட்டுள்ளனர். காவல்துறைக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்காமல் இவர்களை சட்டத்திற்கு புறம்பாக விபரீத செயலில் ஈடுபட்டது கண்டிப்பதாகவும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.